பிரதீப் ரங்கநாதனின் ‛எல்ஐகே' ரிலீஸ் மீண்டும் தள்ளிப்போகிறதா? | மீண்டும் இயக்குனராக களமிறங்கும் பேரரசு! | சூர்யா 47வது படத்தின் புதிய அப்டேட்! | ஆஸ்கர் வென்ற பாடல் பிரபலத்துடன் இணையும் பிரபாஸ்! | ‛வாரணாசி' படத்தால் நாடே பெருமைப்படும்: மகேஷ் பாபு பேச்சு | ஆறு வருடமாக பாலியல் டார்ச்சர் செய்த துணை நடிகை மீது போலீஸில் நடிகர் புகார் | பிடிவாதமாக பெட்ரோலை குடித்த அஜித்; திருப்பதியில் அஜித் எடுத்த ரிஸ்க் | பிளாஷ்பேக்: முதல் ஒளி வடிவம் பெற்ற ஜெயகாந்தனின் “உன்னைப் போல் ஒருவன்” | ஹிந்தி பட புரமோஷனில் காதலுக்கு விளக்கம் கொடுத்த தனுஷ் | ‛நூறு சாமி'க்காக காத்திருக்கும் ‛லாயர்' |

கலர்ஸ் தமிழ் டிவியில் ஒளிபரப்பாகி வரும் 'அபி டெய்லர்' தொடரில் மதன் மற்றும் ரேஷ்மா முன்னணி கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். கலர்ஸ் தமிழில் ஒளிபரப்பாகும் தொடர்களிலேயே 'அபி டெய்லர்' தொடருக்கு ரசிகர்களிடம் அதிக எதிர்பார்ப்பு இருந்தது. ஆனாலும், மற்ற சின்னத்திரை ஹிட் தொடர்களை கம்பேர் செய்யும் போது 'அபி டெய்லர்' டிஆர்பியில் பெரிதாக டஃப் கொடுக்கவில்லை. இதனையடுத்து அந்த தொடரில் தொடர்ச்சியாக பிரபல நடிகர்களை களமிறக்கி வருகின்றனர். சமீபத்தில் நடிகர் ஜெய் ஆகாஷ் மற்றும் அதனை தொடர்ந்து சாந்தினி பிரகாஷ் என்ட்ரி கொடுத்தனர்.
இந்நிலையில் மற்றொரு சின்னத்திரை பிரபலமான வீஜே பப்புவும் 'அபி டெய்லர்' தொடரில் நடிகராக எண்ட்ரி கொடுத்துள்ளார். யூடியூபில் தொடங்கி விஜய் டிவி வரை பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வந்த பப்பு, சமீப காலங்களில் நடிக்கவும் ஆரம்பித்துள்ளார். சிவா மனசுல சக்தி, சின்னத்தம்பி உள்ளிட்ட சீரியல்களிலும் சில குறும்படங்களிலும் பப்பு நடித்துள்ளார். தற்போது 'அபி டெயல்ர்' சீரியலில் ஆட்டோக்காரனாக நடிக்கிறார்.