அஸ்வத் மாரிமுத்துவிற்கு விண்ணப்பித்த 15 ஆயிரம் உதவி இயக்குனர்கள்! | கவுதம் ராம் கார்த்திக் 19வது படத்தின் படப்பிடிப்பு துவங்கியது! | ''இப்போ ரிஸ்க் எடுக்கலைனா.. எப்பவும் இல்ல'': சினிமா என்ட்ரி குறித்து மனம்திறந்த காவ்யா அறிவுமணி | த்ரிவிக்ரம் இயக்கத்தில் தனுஷ்? | குட் பேட் அக்லி - முன்பதிவு நிலவரம் என்ன? | அஜித், தனுஷ் கூட்டணி அடுத்த கட்டத்திற்கு நகர்கிறது! | 'ரெட்ட தல' படத்தின் புதிய அப்டேட்! | ராஜமவுலியுடன் இணையாதது ஏன்? சிரஞ்சீவி விளக்கம் | சென்னையை விட்டு சென்றது ஏன்? சசிகுமார் விளக்கம் | தமிழிலும் வெளியாகும் 'இத்திக்கர கொம்பன்' |
குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் அறிமுகமானவர் கல்யாணி எனும் பூர்ணிதா. இதுதான் அவரது உண்மையான பெயர். ஜெயம் படத்தில் சதாவின் தங்கையாக கல்யாணி கதாபாத்திரத்தில் நடித்த பின் பேபி கல்யாணி என்று அழைக்கப்பட்டு, பின்பு அது அவரது திரைப்பெயர் ஆனது. கல்யாணி வெள்ளித்திரை மற்றும் சின்னத்திரையில் நடிகையாக வலம் வந்தார். அதுமட்டுமில்லாமல் சில நிகழ்ச்சிகளையும் சிறப்பாக தொகுத்து வழங்கியுள்ளார்.
கல்யாணிக்கு 4 வருடங்களுக்கு முன் திருமணம் நடந்தது. அவருக்கு நவ்யா என்ற மகளும் உள்ளார். திருமணத்திற்கு பின் திரையில் தோன்றாமல் ஒதுங்கி இருந்த கல்யாணி, தன்னை அட்ஜெஸ்ட்மெண்ட்டுக்கு அழைக்கிறார்கள் என்றும் குண்டை தூக்கிப்போட்டு சர்ச்சையை கிளப்பி இருந்தார்.
இந்நிலையில் அவர் தற்போது சின்னத்திரை ரியாலிட்டி ஷோ ஒன்றில் கம்பேக் கொடுத்துள்ளார். ஜீ தமிழில் ஒளிபரப்பாகவுள்ள ஜூனியர் சூப்பர் ஸ்டார் சீசன் 4 நிகழ்ச்சியில் கல்யாணி குழந்தைகள் குழுவின் வழிகாட்டியாக உள்ளார். இவருடன் கலக்கப்போவது யாரு அமுதவாணனும் களமிறங்குகிறார். இதன் காரணமாக கல்யாணியின் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மேலும், சக சின்னத்திரை பிரபலங்கள் அவரது கம் பேக்கிற்கு வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர்.