அருந்ததி படம் ஹிந்தியில் ரீமேக் ஆகுவது உறுதி! | வெங்கட் பிரபு, சிவகார்த்திகேயன் படத்தின் கதாநாயகி யார் தெரியுமா? | பிரபாஸ் படத்தில் பிரபல வெளிநாட்டு ஆக்சன் ஹீரோ? | விக்ரம் 63வது படத்தின் புதிய அப்டேட்! | அட்லி, அல்லு அர்ஜுன் படத்தில் இணைந்த மிருணாள் தாகூர்! | பென்ஸ் படத்தில் லாரன்ஸூக்கு ஜோடி இல்லையா? | இளன் இயக்கி, நடிக்கவுள்ள கதாநாயகி யார் தெரியுமா? | ஜூடோபியா : 9 ஆண்டுகளுக்கு பிறகு வரும் 2ம் பாகம் | 'தாரணி'யில் நடிகையின் கதை | போஸ் வெங்கட்டின் ஸ்போர்ட்ஸ் மூவி |

பழம்பெரும் நடிகை லட்சுமியின் மகளான ஐஸ்வர்யா தென்னிந்திய மொழிகளின் முன்னணி நடிகையாக வலம் வந்தார். திருமணத்துக்கு பின் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து வரும் ஐஸ்வர்யாவுக்கு சூர்யாவின் ஆறு படத்தில் நடித்த சவுண்ட் சரோஜா கதாபாத்திரம் நீண்ட நாளுக்கு பிறகு கம்பேக்காக அமைந்தது. தொடர்ந்து தற்போதும் அவ்வப்போது தென்னிந்திய படங்களில் நடித்து வருகிறார். சின்னத்திரை நிகழ்ச்சிகளில் நடுவராக பங்கேற்று வருகிறார்.
இந்நிலையில் அவர் தனது மகள் அனன்யாவுடன் சமீபத்தில் டான்ஸ் ஆடி வீடியோ வெளியிட்டிருந்தார். அந்த வீடியோ வைரலான போது மீடியாக்களின் பார்வை மீண்டும் ஐஸ்வர்யா பக்கம் திரும்பியது. இதனால் அவருக்கு தற்போது சீரியலில் நடிக்க சான்ஸ் கிடைத்துள்ளது.
ஐஸ்வர்யா தற்போது ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் 'நினைத்தாலே இனிக்கும்' என்ற புதிய சீரியலில் இணைந்துள்ளார். ஐஸ்வர்யா, நினைத்தாலே இனிக்கும் ஷூட்டிங் ஸ்பாட்டில் மற்ற நடிகர்களோடு எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் வெளியாகி உள்ளன. அடுத்துவரும் எபிசோடுகளில் அவரது முக்கியத்துவம் பெறுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.