'ஜனநாயகன்' பாடல் வெளியீட்டுவிழாவில் விஜய் பேசியது என்ன? மறந்தது என்ன? | தியேட்டரை மட்டும் நம்பாதீங்க: 2025 சொல்லி கொடுத்த பாடம் | மலேசியாவில் மிரட்டிய 'ஜனநாயகன்' : 'பராசக்தி' படத்துக்கு பிரஷர் | சம்பள விஷயத்தில் 'கண்டிஷன்' போடும் நடிகை | அவமானங்களுக்கு 'ரியாக்ட்' பண்ணாதீர்கள்: நடிகர் சூரி 'அட்வைஸ்' | பாடல்களாய் உலகம் சுற்றுவேன் | 'கொம்புசீவி' தயாராகும் இன்னொரு தனுஷ் | உரிமைக்குரல், வானத்தைப்போல, மெய்யழகன் - ஞாயிறு திரைப்படங்கள் | பிளாஷ்பேக்: வித்தியாசமான தோற்றத்தில் விஜயகாந்த் நடித்து விஸ்வரூப வெற்றிகண்ட "வானத்தைப்போல" | தியேட்டர் நெரிசல் பலி - 'ஏ 11' குற்றவாளியான அல்லு அர்ஜுன் |

கர்ப்பமாக இருக்கும் ஆல்யா மானசா சீரியலை விட்டு விலகுவதாக தகவல் வந்துள்ள நிலையில் கதையை மாற்றி நடிப்பை தொடரப் போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
விஜய் டிவியின் ராஜா ராணி முதல் சீசனில் நடித்த ஆல்யா மானசா, அதில் ஹீரோவாக நடித்த சஞ்சீவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு அய்லா என்ற பெண் குழந்தை உள்ளது. திருமணத்திற்கு பிறகு சின்னத்திரைக்கு இடைவெளி விட்ட ஆல்யா தற்போது ராஜா ராணி சீசன் 2 வில் ஹீரோயினாக சந்தியா கதாபாத்திரத்தில் கலக்கி வருகிறார்.
இந்நிலையில் அவர் இரண்டாவது முறை கர்ப்பமாக உள்ள செய்தி சமீபத்தில் வெளியானது. அதேசமயம் ராஜா ராணி 2வில் அவரது கதாபாத்திரம் போலீஸ் கதாபாத்திரம் என்பதால் சீரியலை மேற்கொண்டு தொடர முடியுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. 'சந்தியா கதாபாத்திரம் இப்போது தான் ஐபிஎஸ் தேர்வுக்கு தயாரகி வருகிறது. எனவே, இன்னும் சில நாட்கள் சந்தியா போலீஸ் ஆவது போல் காட்டாமல் அவர் கர்ப்பமாக இருப்பது போல் காட்டினால் சீரியலில் தொடர்ந்து நடிக்கலாம்' என்று ஆல்யா சீரியல் குழுவிற்கு ஐடியா கொடுத்துள்ளதாக தெரிய வருகிறது.
இதனையடுத்து ஹிந்தியில் வரும் மூலக்கதை போல் அல்லாமல் கதையில் டுவிஸ்ட் அடித்து சந்தியா கர்ப்பமாக இருப்பது போல் சீரியலில் காட்ட போவதாக சின்னத்திரை வட்டாரங்களிலிருந்து தகவல்கள் வெளியாகியுள்ளது. எனினும் கதையில் என்ன நடக்கப் போகிறது என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.