'மாரீசன்' படம் ஜூலை 25ல் வெளியாகிறது | ராஜமவுலி படம் மூலம் இந்திய திரையுலகிற்கு திரும்புவது உற்சாகம் : பிரியங்கா சோப்ரா | 7500 தியேட்டர்களில் வெளியாகும் வார் 2 | கால வரையறையின்றி ஒத்திவைக்கப்பட்ட அனுஷ்காவின் ‛காட்டி' | ஹீரோவாகும் ‛டூரிஸ்ட் பேமிலி' இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் | வேள்பாரி நாவலில் ரஜினிகாந்த்? | பாராட்டுக்கள் கிடைத்தும் வசூலை அள்ளாத 'கண்ணப்பா' | 50வது நாளைக் கடந்த 'மாமன்', நன்றி தெரிவித்த சூரி | ஹரிஹர வீரமல்லு : யு டியூபில் மட்டும் 60 மில்லியன் பார்வைகள் | 'சப்தம்' படத்தை ஓடிடியில் வெளியிட நீதிமன்றம் தடை |
பிக்பாஸ் சீசன் 5 போட்டியாளர்களில் ஒருவராக சுருதி ஜெயதேவன் கலந்து கொண்டுள்ளார். தனது அம்மாவிற்கு சிறுவயதிலேயே திருமணம் நடத்தி வைக்கப்படும் அநீதி இழைக்கப்பட்டதாகவும், தனது அப்பாவை தான் அப்பா என்றே அழைத்ததில்லை என்று கூறினார். அவரது உருக்கமான கதை பலரையும் கலங்க வைத்துள்ளது. இதனையடுத்து பலரும் சுருதி ஜெயதேவன் யார் என சமூக வலைத்தளங்களில் தேட ஆரம்பித்தனர்.
அடிப்படையில் மாடலான இவர் இண்ஸ்டாகிராமில் பல போட்டோஷுட்களை பதிவிட்டுள்ளார். அதில் ஒரு போட்டோவில் கடவுள் லட்சுமி தேவி போல கெட்டப் போட்டு புகைப்படம் எடுத்துள்ளார். அதில் என்ன ஸ்பெஷல் என்றால் இதுவரை நாம் பார்த்த படங்களில் லட்சுமி தேவி வெள்ளையாக இருப்பார். ஆனால், சுருதியின் போட்டோஷூட்டில் லட்சுமி தேவி கருப்பாக இருப்பதை பலரும் பார்த்து பகிர்ந்து வருகின்றனர். இதன் காரணமாக இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.