தயாரிப்பாளர் தக்காளி சீனிவாசன் காலமானார் | போர் சூழலுக்கு மத்தியில் சென்னை திரும்பினார் நடிகர் அஜித்குமார் | பிரியா பவானி சங்கரை தொடர்ந்து ரவிதேஜா படத்தில் இணைந்த தமன்னா! | இன்வெஸ்டிகேஷன் திரில்லர் படத்தில் நடிக்கும் குமரன் | சூப்பர் நேச்சுரல் கிரைம் திரில்லராக உருவாகும் 'மண்டவெட்டி' | தனுசுக்கு ஜோடியாகும் நடிக்கும் ருக்மணி வசந்த்! | 'ஆர்யா 40' படத்தில் இரு நாயகிகள் | 'டென்ஷன்' படத்தில் காமெடி கலந்த வில்லனாக ஆர்.கே.வரதராஜ் | 'ஜெயிலர் 2' படத்தில் ஷாருக்கான் கதாபாத்திரம் என்ன தெரியுமா? | அனிமேஷன் படத்தை இயக்குகிறாரா அனில் ரவிபுடி? |

'பிக்பாஸ் சீசன் 5' நிகழ்ச்சியில், திருநங்கை நமிதா மாரிமுத்து செய்த களேபரத்தால், அவர் வெளியேற்றப்பட்டதாக, தகவல்கள் வெளியாகியுள்ளன.
விஜய், 'டிவி'யில் ஒளிபரப்பாகி வரும், 'பிக்பாஸ் சீசன் 5' நிகழ்ச்சியை, நடிகர் கமல் தொகுத்து வழங்குகிறார். இந்த முறை பெண்கள் அதிகளவில் பங்கேற்க, திருநங்கை நமிதா மாரிமுத்துவும் பங்கேற்றார். கடந்த சில தினங்களுக்கு முன், தன் திருநங்கை வாழ்க்கை குறித்து நமிதா பேசியது, அனைவரது பாராட்டையும், அனுதாபத்தையும் பெற்றது. இதன் தாக்கம் குறைவதற்குள், சக போட்டியாளர் தாமரைச் செல்விக்கும் நமிதாவுக்கும் இடையே ஏற்பட்ட பிரச்னை பெரிதானது.
வீட்டில் இருந்த பொருட்களை துாக்கியெறிந்து, நமிதா ரகளை செய்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளன. நமீதாவை, பிக்பாஸ் அணி சமாதானப்படுத்த முயற்சித்தது. அது, பலனளிக்காத நிலையில், 'ரெட் கார்டு' தரப்பட்டு, நமிதா வெளியேற்றப்பட்டதாக தெரிகிறது. அதே நேரத்தில், தவிர்க்க முடியாத காரணத்தால் நமிதா, அவராகவே வெளியேறியதாகவும் ஒரு தரப்பில் கூறப்படுகிறது.