இப்ப, தமிழ் சினிமாவில் டாப் 5 ஹீரோயின் யார் தெரியுமா? | சூர்யாவின் ‛கருப்பு' ரிலீஸ் எப்போது? | ராஷ்மிகாவின் ‛மைசா' படத்தில் இணையும் புஷ்பா 2 வில்லன் | பராசக்தி படப்பிடிப்பு முடிவடைந்தது | நவம்பர் 21-ல் ரீரிலீஸ் ஆகும் ப்ரண்ட்ஸ் | லாபத்தில் முதலில் நுழைந்த 'பைசன்' | தீபாவளிக்கு ஜனநாயகன் அப்டேட் ஏனில்லை | பொங்கலுக்கு நடிகர் சங்க கட்டடம் திறப்பு : விஷால் திருமணம் எப்போது | பிக்பாஸில் வந்து விட்டால் மட்டும் நடிகையாகி விட முடியாது: தர்ஷிகா | ஹீரோயின் ஆனார் 'அரண்மனை' ஹர்ஷா |
தெலுங்கு டிவி ஒன்றில் ஒளிபரப்பாகி வரும் எவரு மீலோ கோடீஸ்வரரு நிகழ்ச்சியை ஜூனியர் என்.டி.ஆர் தொகுத்து வழங்கி வருகிறார். இந்த நிகழ்ச்சியில் அவ்வப்போது சிறப்பு பங்கேற்பாளராக சினிமா நட்சத்திரங்கள் பங்கேற்பார்கள்.
இதுவரை ராம் சரண், இயக்குநர் ராஜமவுலி, கொரடலா சிவா, மகேஷ் பாபு ஆகியோர் கலந்து கொண்டார்கள். தற்போது சமந்தாவும் கலந்து கொண்டிருக்கிறார். அதோடு கேள்விகளுக்கு சரியாக பதில் அளித்து 25 லட்சத்தை பரிசாக வென்று இருக்கிறார்.
இந்த நிகழ்ச்சியில் தனது திரையுலக பயணம் பற்றி பேசி இருக்கிறாராம். தனிப்பட்ட வாழ்க்கை பற்றியோ நாகசைதன்யா பிரிவு பற்றியோ பேசவில்லையாம். இக்கட்டான மனநிலையிலும் கூட ஒத்துக் கொண்ட இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கேள்விக்கு தெளிவான பதிலை கூறிய சமந்தாவின் மனநிலையை பார்த்து அனைவரும் ஆச்சர்யப்பட்டிருக்கிறார்கள்.
இந்த நிகழ்ச்சி தசரா பண்டிகை ஸ்பெஷலாக அக்டோபர் 15ம் தேதி ஜெமினி டிவியில் ஒளிபரப்பாகவிருக்கிறது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.