டிவி நிகழ்ச்சியில் சவுந்தர்யாவை நினைத்து கண் கலங்கிய ரம்யா கிருஷ்ணன் | மீண்டும் பாலகிருஷ்ணா ஜோடியாக நயன்தாரா நடிப்பது ஏன் | ‛டூரிஸ்ட் பேமிலி' இயக்குனருக்கு பிஎம்டபுள்யூ கார் பரிசு | மாதவன், கங்கனா படத்தின் தலைப்பு என்ன தெரியுமா? | என் துயரத்தை சிலர் கொண்டாடினர் : சமந்தா | போலீஸ் வேடத்தில் சசிகுமார் | 64வது படத்தில் நடிக்க சம்பளத்தை உயர்த்தினாரா அஜித்குமார்? | தமிழ் புத்தாண்டில் சூர்யா-சிம்பு மோதிக்கொள்கிறார்களா? | 'மா இண்டி பங்காரம்' படத்திற்காக தீவிர ஒர்க் அவுட்டில் இறங்கிய சமந்தா! | விஜய் ஆண்டனியின் 'சக்தி திருமகன்' படத்தை பாராட்டிய இயக்குனர் ஷங்கர்! |

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சர்வைவர் நிகழ்ச்சியில் இருந்து நடிகர் ராம் சமீபத்தில் வெளியேற்றப்பட்டார். அவர் அளித்த பேட்டி:இந்த நிகழ்ச்சியில் அதிக நாள் நீடிக்க மாட்டேன் என நன்றாகவே தெரியும். உணவுக்காக அதிக சிரமப்பட வேண்டியிருந்தது. பாதி நேரம் களைப்பாகவே இருக்கும். இது தெரிந்தது தான். ஆனால் நல்ல அனுபவமாக இருந்தது.
சருமப்பிரச்னையும் உருவானதால், போட்டியில் பங்கேற்பது கடினமாகிவிட்டது. நான் நடித்த படம் விரைவில் வெளியாகிறது. அதற்கு உதவுமே என்று தான் ‛சர்வைவர்' நிகழ்ச்சியில் பங்கேற்றேன். மற்றபடி வெற்றி பெற முடியாது என நன்றாக தெரியும். குறும்படம் ஒன்றை இதிலும் போட்டிருந்தால் என் பக்கம் இருந்த நியாயம் வெளிப்பட்டிருக்கும். என் ரசிகர்களே பலர் குறும்படம் வெளியிட்டு விட்டனர். மொத்த பேருமே எனக்கு எதிராக தான் இருந்தனர். போட்டியாளர்கள் எனக்கு எதிராக சின்ன விஷயத்தை, ஊதி பெரிதாக்கிவிட்டனர். இந்த நிகழ்ச்சியே அடுத்தவர்களை காலி செய்வது தான். ரசிகர்களிடம் எனக்கு வரவேற்பு கிடைத்த வரையில் எனக்கு இந்த சர்வைவர் நல்ல அனுபவமே. இவ்வாறு அவர் கூறினார்.