ஜனநாயகன் : வியாபாரத்தில் நீடிக்கும் தடுமாற்றம் ? | அதிசயம், ஆனால், உண்மை… : 'படையப்பா' ரீரிலீஸுக்கு ரஜினிகாந்த் பேட்டி | கவனமாக எழுதப்பட்ட திரைக்கதை : நடிகை வழக்கின் தீர்ப்பு குறித்து பார்வதி கருத்து | தாதா சாஹேப் விருது பெற்ற மோகன்லாலை பேட்ரியாட் படப்பிடிப்பு தளத்தில் கவுரவித்த மம்முட்டி | நடிகர் திலீப் விடுதலை குறித்து மலையாள நடிகர் சங்கம் கருத்து | தி கேர்ள் பிரண்ட் படத்தை கட்டாயம் பாருங்கள் : ஜான்வி கபூர் | சிரஞ்சீவி, நயன்தாராவின் காதல் பாடல் வெளியானது | டிசம்பர் 12ல் ஓடிடிக்கு வரும் காந்தா | தர்மேந்திராவின் 90வது பிறந்தநாள் : ஹேமமாலினி உருக்கம் | பவுன்சர்கள் செயல் : மன்னிப்பு கேட்ட சூரி |

சரவணன் இயக்கத்தில் ஜோதிகா மற்றும் சசிகுமார் இருவரும் முன்னணிக் கதாபாத்திரங்களில் உடன் பிறப்பே என்ற படத்தில் நடித்துள்ளார். இந்தப் படத்தில் சசிகுமார், ஜோதிகா இருவரும் அண்ணன் தங்கையாக நடித்துள்ளனர். சூரி, நிவேதிதா சதிஷ், சமுத்திரக்கனி உள்ளிட்டோரும் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்தப் படத்திற்கு இமான் இசையமைத்துள்ளார். கிராமத்துக் கதைக்களத்தில் படம் உருவாகியுள்ளது.
சில வாரங்களுக்கு முன்னர் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் ரிலீஸ் அப்டேட் வெளியாகியது. படம் அக்டோபர் மாதம் ஓடிடி தளத்தில் வெளியாக இருப்பதாக அறிவித்தனர். இப்போது. 'உடன்பிறப்பே' திரைப்படம் அக்டோபர் 14ம் தேதி ஓடிடி தளத்தில் வெளியாக இருப்பதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர்