காஜல் அகர்வாலுக்கு என்னாச்சு... | கென்யா ட்ரிப்பில் மொபைல் போனை பறிகொடுத்த பிரயாகா மார்ட்டின் | மாதவனை பழிக்குப்பழி வாங்கி விட்டேன் : அஜய் தேவ்கன் பகிர்ந்த சுவாரஸ்ய தகவல் | தீபாவளி ரிலீஸாக வெளியாகும் அனுபமா பரமேஸ்வரனின் இரண்டு படங்கள் | கமல், அஜித் பட அப்டேட்: தீபாவளி பரிசாக வருமா? | மகளிர் ஆணையத்தில் மனைவியுடன் நேரில் ஆஜரான மாதம்பட்டி ரங்கராஜ் | படப்பிடிப்புக்கு 5 நாட்களுக்கு முன்புதான் பைசன் படத்தின் ஸ்கிரிப்டை படித்தேன்! - துருவ் விக்ரம் | ‛உஸ்தாத் பகத்சிங்' படத்தில் இணைந்த பார்த்திபன் | பட தயாரிப்பு நிறுவனம் வழக்கு : நடிகர் விஷால் பதிலளிக்க உத்தரவு | 'கோச்சடையான்' பட விவகாரம் : ரஜினி மனைவி லதாவுக்கு சிக்கல் |
கொரோனா இரண்டாவது அலையின் தீவிரம் குறைந்துள்ள நிலையில் தற்போது தியேட்டர்கள் திறக்கப்பட்டு திரைப்படங்கள் வெளியாகி வருகின்றன. மிகப்பெரிய நடிகர்களின் படங்கள் தங்களது படத்துக்கான ரிலீஸ் தேதியை இறுதி செய்வதில் தீவிரம் காட்டி வருகின்றன.. ஆனால் மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகியுள்ள ராஜமவுலியின் ஆர்ஆர்ஆர் திரைப்படத்திற்கு சரியான ரிலீஸ் தேதி கிடைக்கமால் தடுமாறி வருகிறார்கள்.
2022-ல் தான் அந்தப்படம் வெளியாக இருக்கிறது என்கிற நிலையில் சங்கராந்தி பண்டிகையிலோ அல்லது சம்மரிலோ படத்தை வெளியிட்டால் தான் சிறப்பாக இருக்கும் என ராஜமவுலி நினைக்கிறாராம். ஆனால் சங்கராந்தி பண்டிகைக்கு ஏற்கனவே மகேஷ்பாபு, பவன் கல்யாண் படங்கள் தங்களது அறிவிப்பை வெளியிட்டுவிட்ட நிலையில், தற்போது ஆர்ஆர்ஆர் படக்குழுவினர் சம்மர் ரிலீஸில் கவனத்தை திருப்பி உள்ளார்களாம்.
ஆனால் சம்மரில் அதாவது தெலுங்கு புத்தாண்டில் பான் இந்தியா ரிலீசாக கேஜிஎப்-2 படம் ரிலீஸ் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டு விட்டது. அதனால் அந்த படத்தின் ரிலீஸை அடுத்து 15 நாட்கள் கழித்து ஆர்ஆர்ஆர் படத்தை வெளியிட்டால் சரியாக இருக்கும் என்றும் முடிவு செய்துள்ளார்களாம். ஆனால் இதில் நடிகர் அஜய் தேவ்கன் மூலமாக ஒரு புதிய சங்கடம் ஏற்பட்டுள்ளதாம்.
அதாவது அஜய் தேவ்கன் இந்தியில் நடித்துள்ள 'மே டே' என்கிற படம் ஏப்ரல் 29 ஆம் தேதி, அதாவது கேஜிஎப்-2 ரிலீசுக்கு 15 நாட்கள் கழித்து வெளியாக இருக்கிறதாம். அதேசமயம் ஆர்ஆர்ஆர் படத்திலும் அஜய் தேவ்கன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பதால் அந்த படத்தையும் ஒரே நேரத்தில் வெளியிடும்போது அது இந்தியில் இரண்டு படங்களின் வசூலையும் பாதிக்கும் அபாயம் உள்ளது என்பதால் தற்போது அஜய் தேவ்கனும் தர்ம சங்கடத்தில் இருக்கிறாராம்