‛வா வாத்தியார்' ரிலீஸில் சிக்கல் : இடைக்கால தடை விதித்த நீதிமன்றம் | திருமணம் குறித்து பேசிய ராஷ்மிகா மந்தனா | இந்திய திரையுலகை எட்டு திக்கும் கொண்டு சென்று வாழ்ந்து மறைந்த எளிமையின் சிகரம் ஏவிஎம் சரவணன் | 'டியூட்' படத்தில் மீண்டும் 'கருத்த மச்சான்' பாடல் | அமெரிக்க ஸ்டுடியோவுக்குச் செல்லும் வெங்கட் பிரபு, சிவகார்த்திகேயன் | அகண்டா 2: தெலுங்கானா முன்பதிவு தாமதம் | 'பிளாக் பஸ்டர்' வெற்றி இல்லாத 2025? | பணிவு, பண்பு, ஒழுக்கம் ஆகியவற்றின் ஒட்டுமொத்த உருவம் ‛ஏவிஎம்' சரவணன் : திரையுலகினர் புகழஞ்சலி | ஹீரோயின் ஆன காயத்ரி ரேமா | 8 மணி நேர வேலை சினிமாவில் சாத்தியமில்லை: துல்கர் சல்மான் |

சிரிப்பு நடிகர் மட்டுமின்றி சிந்திக்க வைக்கக்கூடிய நடிகராகவும் இருந்தவர் விவேக். முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாமின் மீது அதிக பற்று கொண்டவரான விவேக், அவரது மறைவிற்கு பிறகு கிரீன் கலாம் என்ற திடத்தை தொடங்கி ஒரு கோடி மரக்கன்றுகளை நடுவதை இலக்காகக் கொண்டு பயணித்து வந்தார். கடந்த ஏப்ரல் மாதம் அவர் மரணமடைந்தார்.
மேலும், விவேக் காமெடியனாக நடித்து கடைசியாக தாராள பிரபு என்ற படம் வெளியானது. இந்த நிலையில் கடந்த ஆண்டிற்கான சைமா விருது விழாவில் சிறந்த காமெடியனுக்கான விருது விவேக்கிற்கு வழங்கப்பட்டது. அந்த விருதினை அவர் சார்பில் நடிகர் யோகிபாபு பெற்றுக் கொண்டார். அதோடு விவேக்கின் வீட்டிற்கு சென்று அந்த விருதினை அவர் வழங்கியிருக்கிறார்.
இந்ததகவலை விவேக்கின் மகள் சோசியல் மீடியாவில் பகிர்ந்துள்ளார். அதில், தனது தந்தைக்கான விருதினை பெற்றதற்காக தாராளபிரபு படக்குழுவிற்கு நன்றி தெரிவித்துள்ள அவர், அந்த விருதினை தனது வீடு தேடி வந்து கொடுத்த யோகிபாபுவிற்கும் நன்றியை தெரிவித்துள்ளார்.