டிச., 27ல் மலேசியாவில் ‛ஜனநாயகன்' இசை வெளியீடு | டிசம்பர் 12ல் ரஜினி பிறந்தநாளில் ரீ ரிலீஸ் ஆகும் அண்ணாமலை | ராஜமவுலிக்கு ஆதரவாக குரல் கொடுத்த ராம் கோபால் வர்மா | பிரபல எழுத்தாளர் உடன் கைகோர்க்கும் சந்தானம் | அஞ்சான் படத்தின் நீளத்தை குறைத்த லிங்குசாமி | 26 வருடங்களுக்கு பிறகு ரீ ரிலீஸ் ஆகும் அமர்க்களம் | மீண்டும் கன்னட சினிமாவிற்கு திரும்பிய பிரியங்கா மோகன் | வரி ஏய்ப்பு : நாகார்ஜுனா, வெங்கடேஷ் குடும்ப ஸ்டுடியோக்களுக்கு நோட்டீஸ் | ஜனநாயகன் - தெலுங்கு வியாபாரம் முடிவு | தெலுங்கில் ரீரிலீசாகும் 'பையா' : மீண்டும் பார்க்க கார்த்தி ஆர்வம் |

எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கத்தில் சமுத்திரக்கனி, சாக்ஷி அகர்வால், இனியா, பருத்திவீரன் சரவணன் நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் நான் கடவுள் இல்லை. இப்படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் நடிகர் விஜய் ஆண்டனி, இயக்குனர்கள் ராஜேஷ், பொன்ராம், தயாரிப்பாளர் சேவியர் பிரிட்டோ உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர்.
சமுத்திரகனி பேசும் போது, எஸ்.ஏ.சந்திரசேகர் சார் இயக்கத்தில் நடித்தது பெருமை. அவருடைய உருவத்தில் என்னுடைய குருநாதர் கே.பாலச்சந்தர் சாரை பார்த்தது போல் இருந்தது. இவர் மூலம் கே.பாலச்சந்தர் சார் மீண்டும் கிடைத்து விட்டார் என்றார்.
எஸ்.ஏ.சந்திரசேகர் பேசும் போது, எனக்கும் விஜய்க்கும் பிரச்சனை இருக்கிறது. எந்த வீட்டில்தான் பிரச்சனை இல்லை. எந்த வீட்டிலும் அப்பா, மகன் சண்டை போடுவது இல்லையா... சில நாட்களில் அது கட்டிப்பிடித்துக் கொள்வார்கள். அதுபோல் தான் நானும் விஜய்யும். இன்று சண்டை போட்டுக் கொள்வோம், நாளை சேருவோம் என்றார். சமுத்திரகனியை தமிழ்நாட்டில் அதிகம் பார்க்க முடியவில்லை. ஐதராபாத்தில் தங்கி தெலுங்கு படங்களில் அதிகம் நடித்து வருகிறார். சிறப்பான வளர்ச்சி. பொதுவாக நடிகைகள் நடிக்கரதோடு சரி, டப்பிங் பேச வர மாட்டாங்க, புரமோஷனுக்கு வர மாட்டாங்க... ஆனா எனக்கு இந்த படத்தில் நடித்த இனியா, சாக்ஷி அகர்வால் என இரண்டு நடிகைகள், நடித்து முடித்து, டப்பிங் பேசி, பட விழாவிற்கும் வந்து இருக்கிறார்கள். ரொம்ப சந்தோஷம் என்றார்.




