தயாரிப்பாளர் தக்காளி சீனிவாசன் காலமானார் | போர் சூழலுக்கு மத்தியில் சென்னை திரும்பினார் நடிகர் அஜித்குமார் | பிரியா பவானி சங்கரை தொடர்ந்து ரவிதேஜா படத்தில் இணைந்த தமன்னா! | இன்வெஸ்டிகேஷன் திரில்லர் படத்தில் நடிக்கும் குமரன் | சூப்பர் நேச்சுரல் கிரைம் திரில்லராக உருவாகும் 'மண்டவெட்டி' | தனுசுக்கு ஜோடியாகும் நடிக்கும் ருக்மணி வசந்த்! | 'ஆர்யா 40' படத்தில் இரு நாயகிகள் | 'டென்ஷன்' படத்தில் காமெடி கலந்த வில்லனாக ஆர்.கே.வரதராஜ் | 'ஜெயிலர் 2' படத்தில் ஷாருக்கான் கதாபாத்திரம் என்ன தெரியுமா? | அனிமேஷன் படத்தை இயக்குகிறாரா அனில் ரவிபுடி? |

ரமணா ரீமேக்கை தெலுங்கில் சிரஞ்சீவியை வைத்து ஸ்டாலின் என்ற பெயரில் இயக்கிய ஏ.ஆர்.முருகதாஸ், அதன்பிறகு மகேஷ்பாபுவை வைத்து ஸ்பைடர் என்ற படத்தை இயக்கினார். அல்லு அர்ஜூனை வைத்து முருகதாஸ் ஒரு படம் இயக்கயிருப்பதாக ஏற்கனவே செய்திகள் வெளியாகின.
இந்த நிலையில் தற்போது புஷ்பா படத்தின் முதல் பாகத்தை முடித்து விட்டார் அல்லு அர்ஜூன். அப்படம் டிசம்பரில் திரைக்கு வருகிறது. அதையடுத்து அதன் இரண்டாம் பாகம் அடுத்த ஆண்டு கோடை விடுமுறையில் வெளியாக உள்ளது.
அப்படத்தை முடித்த பிறகு மூன்று இயக்குனர்களுக்கு அல்லு அர்ஜூன் கால்சீட் கொடுத்திருப்பதாக டோலிவுட்டில் ஒரு செய்தி வெளியாகியுள்ளது. அதில் கொரட்டல்ல சிவா, பிரசாந்த் நீல் போன்ற இயக்குனர்களுடன் ஏ.ஆர்.முருகதாஸின் பெயரும் இடம் பெற்றுள்ளது. விஜய்யின் 65ஆவது படத்தை இயக்க இருந்து பின்னர் வெளியேறிய முருகதாஸ், அந்த கதையைத்தான் அல்லு அர்ஜூனிடத்தில் சொல்லி ஓகே பண்ணியிருப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.