அமெரிக்காவில் ஜாக்கி சானுடன் ஹிருத்திக் ரோஷன் சந்திப்பு | அஜித் 65வது படத்தை இயக்குவது யார்... புதிய தகவல் | பாண்டிராஜ் படத்தில் ஹரிஷ் கல்யாண்.? | மீண்டும் மோகன்லாலை இயக்கும் தருண் மூர்த்தி ; தொடரும் பட வெற்றி விழாவில் அறிவிப்பு | வி.ஜே.சித்துவின் டயங்கரம் படப்பிடிப்பு பூஜையுடன் துவங்கியது | 2025ல் வெளியான படங்களில் 7 மட்டுமே 100 கோடி வசூல் | நானிருக்க, இளையராஜா பாட்டு எதுக்கு: நிவாஸ் கே பிரசன்னா 'ஓபன் டாக்' | பாலிவுட் பிரபலங்களைக் கிண்டலடித்த 'காந்தரா சாப்டர் 1' வில்லன் | தமிழ் சினிமாவிற்கு புதிய வில்லன் | அப்பா கதாபாத்திரங்களையும் அழுத்தமாய் உருவாக்கும் மாரி செல்வராஜ் |

தெலுங்குத் திரையுலகில் நடிகர் சங்கத்திற்கென 'மூவி ஆர்ட்டிஸ்ட் அசோசியேஷன்' என்ற சங்கம் உள்ளது. அந்த சங்கத்திற்கான புதிய நிர்வாகிகளுக்கான தேர்தல் அடுத்த மாதம் 10ம் தேதி நடைபெற உள்ளது.
இதில் நடிகர் பிரகாஷ்ராஜ் தலைமையிலான அணிக்கும், மஞ்சு விஷ்ணு தலைமையிலான அணிக்கும்தான் கடுமையான போட்டி உள்ளது. கன்னட நடிகரான பிரகாஷ்ராஜ் எப்படி தெலுங்குத் திரையுலகத்தில் உள்ள சங்கத்திற்குப் போட்டியிடலாம் என்ற சர்ச்சை எழுந்தது. அதன்பின் அது அப்படியே அடங்கிப் போனது.
இந்நிலையில் தற்போது தேர்தலுக்கான பிரச்சாரம் தீவிரமாக நடந்து வருகிறது. இரு தினங்களுக்கு முன்பு நடிகர் சங்கர் உறுப்பினர்கள் பலருடன் சந்திப்பு ஒன்றை நடத்தினார் பிரகாஷ்ராஜ். அப்போது அவரைத் தலைவராகத் தேர்ந்தெடுத்தால் சங்கத்திற்காக 10 கோடி ரூபாயை நன்கொடை தருவதாக அறிவித்துள்ளாராம். அவ்வளவு பெரிய தொகையை பிரகாஷ்ராஜ் அறிவித்தது குறித்துதான் தெலுங்குத் திரையுலகத்தில் தற்போது பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
முன்னணி ஹீரோக்கள் பலரும் பிரகாஷ்ராஜுக்கு அவர்களது ஆதரவுகளைத் தெரிவித்துள்ளார்களாம்.