ரஜினியின் 'ஜெயிலர்-2' ரிலீஸ் ஜூனிலிருந்து ஆகஸ்ட்டுக்கு மாறுகிறது! | சென்னையில் சீர்காழி கோவிந்தராஜன் பெயரில் சாலை | எம்ஜிஆரின் 'இதயக்கனி' படத்தை பார்த்த எடப்பாடி பழனிசாமி | ராஜமவுலி படத்தை அடுத்து சந்தீப் ரெட்டி வங்கா படத்தில் நடிக்கும் மகேஷ் பாபு! | திருமணத்திற்கு 10 நாளே இருக்கும் நிலையில் ஹிந்தி படத்திலிருந்து வெளியேறிய ராஷ்மிகா! | ரொமாண்டிக் பேண்டசி படமாக உருவாகும் 'டபுள் ஆக்குபன்சி' | காளை அடக்குபவராக விமல் நடிக்கும் 'வடம்' | இசை அமைப்பாளரை மணந்தார் ரோஷினி | பிளாஷ்பேக் : பாக்யராஜை இயக்கிய பாலகுமாரன் | பிளாஷ்பேக்: தமிழில் குழந்தை நட்சத்திரமாக நடித்த பாலிவுட் நடிகை |

ரஜினி நடித்த படங்கள் வெளியாகும் போதெல்லாம், அவரது, கட் அவுட்க்கு பாலாபிஷேகம் செய்வதை வாடிக்கையாக கொண்டிருந்த ரசிகர்கள், தற்போது ஆடு வெட்டி பலி கொடுக்க துவங்கி உள்ளனர். ரஜினி நடித்த, அண்ணாத்த படம் தீபாவளிக்கு வெளியாக உள்ளது. ரஜினியின் அரசியல் பிரவேசம் கானல் நீரான நிலையில், அண்ணாத்த படத்தை அவரது ரசிகர்கள் ஆவலுடன் எதிர்நோக்கி உள்ளனர். விநாயகர் சதுர்த்தியன்று அண்ணாத்த படத்தின் முதல் போஸ்டர் மற்றும் வீடியோ வெளியானது.
இதை ரசிகர்கள் சிலர், திருச்சி உள்ளிட்ட பகுதிகளில் ஆடு பலி கொடுத்து கொண்டாடி உள்ளனர்.அண்ணாத்த படத்தின் ரஜினி, கட் அவுட் முன் ஆட்டை வெட்டி ரத்த அபிஷேகம் செய்தனர். இந்த காட்சிகள், சமூக வலைதளத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தின.சமீபத்தில், தெலுங்கு நடிகர் கிச்சா சுதீப்புக்காக அவரது ரசிகர்கள், எருமையை வெட்டி பலி கொடுத்திருந்தனர். இதற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்திருந்த நிலையில், ரஜினிக்காக ஆடு வெட்டியது சர்ச்சையாகி உள்ளது. ஏற்கனவே, 2.0 படத்திற்காகவும் ரஜினி ரசிகர்கள் சிலர் பலி கொடுத்திருந்தனர். அதற்கு, பீட்டா விலங்குகள் நல அமைப்பு கண்டனம் தெரிவித்திருந்தது.




