பிராமணர்கள் குறித்து அவதுாறு கருத்து: மன்னிப்பு கேட்டார் 'மஹாராஜா' நடிகர் | சினிமாவை வாழ விடுங்கள்: நடிகை விஜயசாந்தி | 'கங்குவா' டிரைலரில் பாதி பார்வைகள் பெற்ற 'ரெட்ரோ' டிரைலர் | வரதட்சணை வாங்கி திருமணம் செய்து கொண்டேனா? ரம்யா பாண்டியன் கொடுத்த விளக்கம் | சிவப்பு நிறத்தில் புதிய கார் வாங்கிய ஏ. ஆர். ரஹ்மான்! | ‛போய் வா நண்பா': ‛குபேரா' படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வெளியானது! | இன்று திருமணம் செய்து கொண்ட பிக்பாஸ் காதல் ஜோடி அமீர்- பாவனி ! | காலேஜ் ரவுடியாக நடிக்கும் சிம்பு! | 'ஜிங்குச்சா' - இரண்டு நாளில் இருபது மில்லியன் | தனது இயக்குனர்களுக்காக ஒரு அறிக்கை வெளியிடுவாரா அஜித்குமார்? |
ஏ.எல்.விஜய் இயக்கத்தில் கங்கனா நடிப்பில் உருவாகியுள்ள தலைவி படம் நேற்றைய தினம் வெளியானது. தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளில் இந்த படம் வெளியாகி இருப்பதை அடுத்து ஹாலிவுட் படங்களான சாங் சி மற்றும் எப்-9 ஆகிய படங்களும் இந்தியா முழுக்க திரையிடப்பட்டு ஓடிக்கொண்டிருக்கின்றன. அதோடு இந்த இரண்டு படங்களும் மிகப்பெரிய அளவில் வசூல் சாதனை செய்து வருகின்றன. இந்த செய்தி கங்கனாவிற்கு மிகப்பெரிய அதிர்ச்சியை கொடுத்திருக்கிறது.
இதற்கு முக்கிய காரணம், பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் நடிப்பில் வழியான பெல்பாட்டம் திரைப்படம் 4 நாட்களில் 2.75 கோடிகளை வசூலித்தபோது, ஹாலிவுட் படமான சாங் சி முதல் மூன்று தினங்களில் 12.63 கோடிகளை வசூலித்தது. இப்படி அக்ஷய்குமார் போன்ற நடிகர்களின் படங்களுக்கே இந்த நிலை என்றால் தனது தலைவி படத்தின் வசூல் இந்த ஹாலிவுட் படங்களை பாதிக்கப்படுமோ என்ற அதிர்ச்சி காரணமாகவே ஹாலிவுட் படங்களால் இந்திய படங்களின் வசூல் பாதிக்கிறது. அதனால் ஹாலிவுட் படங்களின் இந்திய ஆதிக்கத்தை தடுக்க வேண்டும் என்று ஒரு அதிரடி கருத்து வெளியிட்டுள்ளார் கங்கனா.