ரத்தம் தெறிக்கும் டிசி படத்தின் டிரைலர் | கருப்பு படத்தில் முதல்வர் விஜய்க்கு நன்றி கார்டு | பூஜா ஹெக்டேவின் நடிப்பில் இந்த ஆண்டு வெளியாகும் முதல் படம் | முதல் நாளே 10 கோடி வசூலை தாண்டிய ‛அதிரடி' திரைப்படம் | துரந்தர் 2 : ஓயே ஓயே பாடலுக்கு தடை விதிக்க நீதிமன்றம் மறுப்பு | முதல்வர் விஜயை சந்தித்து கமல் வைத்த 6 கோரிக்கை | இந்நாள் முதல்வரையும், முன்னாள் முதல்வரையும் அடுத்தடுத்து சந்தித்த நாசர் | சம்பளம் பற்றி வெளிப்படையாகச் சொன்ன சனம் ஷெட்டி | கருப்பு : முதல் நாள் வசூல் எவ்வளவு ? | துரந்தர் 2 : ஓடிடி வெளியீடு இரண்டு வாரம் தள்ளி வைப்பு |

சிவா இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள படம் அண்ணாத்த. நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், குஷ்பு, மீனா, யோகி பாபு, ஜெகபதி பாபு உள்ளிட்ட ஏகப்பட்ட திரை நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். கொரோனா உள்ளிட்ட பிரச்னைகளால் இரண்டு ஆண்டுகளாக உருவாகி வந்த இதன் படப்பிடிப்பு சமீபத்தில் முடிந்தது. தீபவாளி வெளியீடு என்று ஏற்கனவே அறிவிப்பு வெளியிடப்பட்டு விட்டதால் படத்திற்கான இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடக்கின்றன.
இந்நிலையில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு இன்று காலை 11 மணிக்கு அண்ணாத்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டது. திருவிழா பின்னணியில் கோயில் மணிகள், அரிவாள்கள் நிறைந்து இருக்க, பட்டு வேஷ்டி, சட்டையில் கூலிங் கிளாஸ் அணிந்து ஸ்டைலாக போஸ் கொடுத்துள்ளார் ரஜினி. இதை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். இன்று மாலை அண்ணாத்த படத்தின் மோஷன் போஸ்டர் வீடியோவும் வெளியாக உள்ளது.