ரஜினி, சுந்தர்.சி கூட்டணியில் புதிய படம்? | தீபாவளி பண்டிகையையொட்டி ரசிகர்களுக்கு 'டபுள் ட்ரீட்': இந்த வார ஓடிடி ரிலீஸ்...! | பிரபாஸ் பிறந்தநாளில் ரசிகர்களுக்கு இரட்டை விருந்து | தீபிகா படுகோனேவின் குரல் இனி மெட்டா ஏஐ-யில் ஒலிக்கும் | டாக்ஸிக் படப்பிடிப்பில் பலத்த பாதுகாப்பு | பைசன் டைட்டிலுக்கு மன்னிப்பு கேட்ட மாரி செல்வராஜ் | ஹீரோவானார் 'திருமணம்' சித்து: மனைவியை புகழ்ந்து பேச்சு | பிளாஷ்பேக் : இளையராஜா ஆதிக்கத்தால் தாக்குபிடிக்க முடியாத தேவேந்திரன் | பிளாஷ்பேக் : 3 மொழிகளில் படமான ஸ்ரீதரின் முதல் கதை | காஜல் அகர்வாலுக்கு என்னாச்சு... |
நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், பிரியங்கா அருள் மோகன், யோகிபாபு, அர்ச்சனா உள்ளிட்ட பலர் நடித்துள்ள படம் டாக்டர். கடந்தாண்டே ரிலீஸாக வேண்டி படம் கொரோனா பிரச்னையால் சிலமுறை தள்ளிப்போனது. தொடர்ந்து தியேட்டர்கள் மூடப்பட்டதால் ஓடிடியில் வெளியிட பேசி வந்தனர். கிட்டத்தட்ட ஓடிடி என ரிலீஸ் என தயாரிப்பாளர் முடிவெடுத்த நிலையில் சமீபத்தில் தியேட்டர்கள் மீண்டும் திறக்கப்பட்டன. இப்போது 50 சதவீதம் இருக்கைகளுடன் தியேட்டர்கள் இயங்கி வருவதால் ஓடிடி ரிலீஸை கைவிட்டுள்ளனர். அடுத்தமாதம் தியேட்டரில் படம் வெளியியாகும் என அறிவித்துள்ளனர்.