அதிகமான பரபரப்பை ஏற்படுத்திய பிரியங்கா, மணிமேகலை சண்டை | இந்த வார ரிலீஸ், யாருக்கு வரவேற்பு? | சமரசம் ஆனதும் வெளிவந்த 'தனுஷ் 52' அறிவிப்பு | மலையாள திரையுலகில் உருவாகிறது புதிய சங்கம்? | மும்பையில் ரூ.30 கோடி மதிப்பில் வீடு வாங்கிய பிரித்விராஜ் | தர்ஷன் இருந்த சிறைப்பகுதியில் சோதனை ; 15 செல்போன், 7 ஸ்டவ், 5 கத்திகள் சிக்கின | கூலி படப்பிடிப்பு தளத்தில் மனசிலாயோ பாடலுக்கு நடனமாடிய ரஜினி | ஓணம் கொண்டாட்டத்தில் மகனை அறிமுகப்படுத்திய அமலா பால் | ஜானி மாஸ்டர் கைது செய்யப்படுவாரா ? | 400 கோடி வசூலைக் கடந்த 'தி கோட்' |
சமீபத்தில் தான் இன்ஸ்டாகிராமில் கணக்கு தொடங்கினார் ஜோதிகா. அதோடு தான் இமயமலைக்கு சென்றபோது தேசிய கொடியை பறக்க விட்டபடி எடுத்த புகைப்படத்தையும் வெளியிட்டார். அந்தவகையில் அவர் சோசியல் மீடியாவுக்கு வந்த முதல்நாளிலேயே அவரை மில்லியன் பார்வையாளர்களுக்கு மேல் கடந்து சென்றனர்.
இந்த நிலையில் சமீபகாலமாக ஜோதிகா நடித்த சில படங்கள் ஓடிடி தளங்களில் வெளியிடப்பட்டு வரும் நிலையில், தமிழில் கவுதம் ராஜ் இயக்கத்தில் அவர் நடித்த ராட்சசி படத்தை ஹிந்தியில் மேடம் கீதாராணி என்ற பெயரில் டப் செய்து வெளியிட்டவர்கள், பின்னர் யூடியூப்பிலும் வெளியிட்டனர். தற்போது அப்படம் 200 மில்லியன் பார்வையாளர்களை கடந்து போய்க் கொண்டிருக்கிறது. அந்தவகையில் பிரபல ஹீரோக்களின் படங்களுக்கு இணையாக ஜோதிகாவின் படமும் யூடியூப்பில் சாதனை செய்திருக்கிறது.