டிச., 27ல் மலேசியாவில் ‛ஜனநாயகன்' இசை வெளியீடு | டிசம்பர் 12ல் ரஜினி பிறந்தநாளில் ரீ ரிலீஸ் ஆகும் அண்ணாமலை | ராஜமவுலிக்கு ஆதரவாக குரல் கொடுத்த ராம் கோபால் வர்மா | பிரபல எழுத்தாளர் உடன் கைகோர்க்கும் சந்தானம் | அஞ்சான் படத்தின் நீளத்தை குறைத்த லிங்குசாமி | 26 வருடங்களுக்கு பிறகு ரீ ரிலீஸ் ஆகும் அமர்க்களம் | மீண்டும் கன்னட சினிமாவிற்கு திரும்பிய பிரியங்கா மோகன் | வரி ஏய்ப்பு : நாகார்ஜுனா, வெங்கடேஷ் குடும்ப ஸ்டுடியோக்களுக்கு நோட்டீஸ் | ஜனநாயகன் - தெலுங்கு வியாபாரம் முடிவு | தெலுங்கில் ரீரிலீசாகும் 'பையா' : மீண்டும் பார்க்க கார்த்தி ஆர்வம் |

பிரியமானவள் தொடரின் மூலம் அறிமுகமானவர் நடிகை பிரவீனா. மலையாளத்தில் திரைப்படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்து புகழ் பெற்றிருந்தார். மேலும், இரண்டு முறை பெஸ்ட் டப்பிங் ஆர்டிஸ்டுக்கான விருதுகளையும் வாங்கியுள்ளார். தமிழ் சின்னத்திரையில் முக்கிய நடிகையாக வலம் வரும் பிரவீனா, தற்போது விஜய் டிவி ராஜா ராணி 2 தொடரில் நடித்து வருகிறார்.
இன்ஸ்டாகிராமில் இவர் வெளியிடும் பதிவுகளுக்கு நல்ல வரவேற்பு இருந்து வருகிறது. பிரவீனா சில தினங்களுக்கு முன் 'கிரிஹாலெக்ஷ்மி' என்ற மலையாள மேகசீன் ஒன்றிற்காக தனது மகளுடன் எடுத்துகொண்ட போட்டோஷூட்டை வெளியிட்டிருந்தார். இதனையடுத்து பிரவீனா தனது மகளுடன் மாடர்ன் உடையில் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் தற்போது இணையத்தில் கசிந்து வைரலாகி வருகிறது. இதைப்பார்க்கும் ரசிகர்கள் இரண்டு அழகிகளில் யாரை பார்ப்பது யாரை விடுவது என கமெண்ட் அடித்து வருகின்றனர்.




