மதராஸி ‛கம்பேக்' கொடுக்கும் படமாக இருக்கும் என்கிறார் ஏ.ஆர்.முருகதாஸ் | 'ஏஸ்' தோல்வியிலிருந்து ஏறி வந்த விஜய் சேதுபதி | ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்த மாதம்பட்டி ரங்கராஜ் இரண்டாவது திருமணம் | வாடகை வீட்டில் வசிப்பது ஏன் ? பாலிவுட் நடிகர் அனுபம் கெர் ஆச்சரிய விளக்கம் | அஜித்தை வைத்து ஆக்ஷன் படம் இயக்க லோகேஷ் கனகராஜ் ஆசை | ராஷ்மிகாவின் மைசா படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது | பிளாஷ்பேக் : வரிசை கட்டிவந்த யுத்த பிரச்சாரத் திரைப்படங்கள் | அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் நடிப்பதை உறுதி செய்த லோகேஷ் கனகராஜ் | வெற்றிமாறன், சிம்பு படத்தின் புதிய அப்டேட் | ஆகஸ்ட் 1ல் பல படங்கள் போட்டி.. |
பிக்பாஸ் புகழ் மஹத், ஐஸ்வர்யா தத்தா நடிக்கும் படம் கெட்டவன்னு பேர் எடுத்த நல்லவன்டா. பிரபுராம் இயக்குகிறார், ஆர்.டி.மதன்குமார் தயாரிக்கிறார், தரண் குமார் இசை அமைக்கிறார். யோகி பாபு, மொட்டை ராஜேந்திரன் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். ரொமான்ஸ் காமெடி வகையில் உருவாகும் இத்திரைப்படத்தில் அறிமுக நடிகர் ஆதவ் வில்லனாக நடிக்கிறார். படத்தின் இறுதிகட்ட பணிகள் நடந்து வருகிறது.
பிரபுராம் கூறியதாவது: இரண்டு ஆண்கள், அதாவது ஹீரோ மஹத்தும், வில்லன் ஆதவ்வும் ஐஸ்வர்யா தத்தாவை காதலிக்கிறார்கள். ஐஸ்வர்யா ஆதவுக்கென்று முடிவாகி திருமண நிச்சயதார்த்தமும் நடக்கிறது. எல்லா வகையிலும் தன்னை விட வலியவரான ஆதவின் கேரக்டரை தாண்டி மஹத் எப்படி ஐஸ்வ்யா தத்தாவை கை பிடிக்கிறார் என்பதுதான் கதை. பல முன்னணி கலைஞர்கள் பங்களிப்பில் காதல் காமெடி கலந்த கமர்ஷியல் படமாக உருவாகி வருகிறது. என்றார்.