'கருப்பு' ரிலீஸால் தள்ளிப் போகும் சூர்யாவின் 'விஸ்வநாத் அண்ட் சன்ஸ்' | முதல்வராக பதவியேற்ற முதல்நாளே கோரிக்கை வைத்த திருப்பூர் சுப்ரமணியன் | விஜய் தேவரகொண்டாவின் பிறந்த நாளில் வெளியான 'ரவுடி ஜனார்த்தனா' போஸ்டர்! | 'திரிஷ்யம்-3' வெற்றி பெற்றால் 4, 5ம் பாகமும் உருவாகும்!- மோகன்லால் வெளியிட்ட தகவல் | 'கடார் 3' உறுதி ; அமிஷா பட்டேல் வெளியிட்ட தகவல் | ரஜினி, கமல் படத்தில் திரிஷா? | ஒரு முறை இல்லை, பலமுறை வருவது தான் காதல்! - நடிகை தமன்னா | 'ஜெயிலர் 2' படத்தின் முதல் பாடல் எப்போது? | மீண்டும் இணையும் 'ரௌத்திரம்' பட கூட்டணி! | அபிஷன் ஜீவின்த் படத்தில் இரண்டு நாயகிகள்! |

1997ல் வசந்த் இயக்கிய நேருக்குநேர் என்ற படத்தில் விஜய்யுடன் இணைந்து இன்னொரு ஹீரோவாக அறிமுகமானவர் சூர்யா. அதன்பிறகு பல படங்களில் நடித்தபோதும் பாலா இயக்கத்தில் அவர் நடித்த நந்தா படம் தான் சூர்யாவை பேச வைக்கும் படமாக அமைந்தது. அதன்பிறகு பிதாமகனும் சூர்யாவுக்கு இன்னொரு திருப்புமுனை படமாக அமைந்தது. அந்த வகையில், ஆரம்ப கால சூர்யாவை செதுக்கியவர் பாலா தான் என்பதை மறுக்க முடியாது. அதன்பிறகு பாலா தயாரிப்பில் மாயாவி படத்தில் அவருடன் இணைந்த சூர்யா அதன்பிறகு இணையவில்லை.
இந்த நிலையில், கடைசியாக விக்ரமின் மகன் துருவ் விக்ரம் நடித்த அர்ஜூன்ரெட்டி ரீமேக்கான வர்மா படத்தை இயக்கினார் பாலா. ஆனால் அந்த படத்தை படக்குழு வெளியிடாமல் கிடப்பில் போட்டு விட்டு பின்னர் அதேபடத்தை வேறு இயக்குனரை வைத்து இயக்கி வெளியிட்டனர். இது பாலாவுக்கு மிகப்பெரிய அதிர்ச்சியாக அமைந்தது.
இந்த நிலையில்தான் தனது பரதேசி படத்தில் நடித்த அதர்வாவை வைத்து புதிய படம் இயக்கும் வேலைகளில் பாலா இறங்கியிருக்கிறார். அதோடு தன்னை ஆரம்ப காலத்தில் கைதூக்கி விட்ட பாலாவுக்கு கைகொடுக்கும் விதமாக இந்த படத்தை சூர்யா தயாரிக்கிறார் என்கிற தகவலும் வெளியாகி வந்தன. ஆனால் இப்போது பார்த்தால் இந்த படத்தில் சூர்யா, அதர்வா இருவரும் இணைந்து நடிக்கயிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. அடுத்த சில மாதங்களில் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்க உள்ளது.