''அப்பா ஒரு குழந்தை; ஆதாரமற்ற வதந்திகளை பரப்பாதீர்கள்'' - ஏ.ஆர்.ரஹ்மான் மகன் வேதனை | அழகுக்காக ஸ்ரீதேவி பட்ட சிரமம் : போனி கபூர் தகவல் | 'வேவ்ஸ்' ஓ.டி.டி., தளம் : பிரசார் பாரதி துவக்கம் | நவ.26ம் தேதியில் விடுதலை-2 படத்தின் இசை வெளியீட்டு விழா | தெலுங்கில் அறிமுகமாகும் மமிதா பைஜூ | திருமணத்திற்கு தயாராகும் தமன்னா | திருப்பதி கோவிலில் சாமி தரிசனம் செய்த சந்தானம் | நடிகை சீதா வீட்டில் நகை திருட்டு : போலீசில் புகார் | சமந்தா சொல்வது உண்மைதான் : அர்ஜுன் கபூர் ஒப்புதல் | சர்ச்சைகளை நீர்த்துப்போக செய்யும் விதமாக தயாராகிறதா மோகன்லால் - மம்முட்டி படம்? |
பிரமாண்டமாக தான் இயக்கிய பாகுபலி படத்தின் இரண்டு பாகங்களுக்கும் மிக சரியான ரிலீஸ் தேதிகளை தேர்வு செய்து அவற்றை மிகப்பெரிய வெற்றிப்படமாக மாற்றினார் இயக்குனர் ராஜமவுலி. அதேசமயம் தற்போது ராம்சரண் ஜூனியர் என்.டி.ஆர் இருவரையும் வைத்து தான் இயக்கிவரும் ஆர்ஆர்ஆர் படத்திற்கு சரியான ரிலீஸ் தேதி அமையாமல் திணறி வருகிறார் ராஜமவுலி.
கொரோனாவின் இரண்டு அலைகள் காரணமாக மற்ற முன்னணி நடிகர்களின் படங்களும் ரிலீஸ் தேதி தள்ளிப்போனதால், இப்போது முன்கூட்டியே முக்கியமான பண்டிகை தேதிகளை புக் செய்து வைத்து விட்டனர். பிரபாஸ்-பூஜா ஹெக்டே நடிப்பில் உருவாகியுள்ள ராதே ஷ்யாம் படம் கூட 2022 சங்கராந்தி பண்டிகை ரிலீஸ் என அறிவித்தாகிவிட்டது.
இந்தநிலையில் ராஜமவுலியும் அதே சங்கராந்தி பண்டிகையன்று ஆர்ஆர்ஆர் படத்தை வெளியிடலாம் என விரும்புகிறாராம். இதுகுறித்து பிரபாஸிடம் அவர் பேசியதாகவும் ராதே ஷ்யாம் பட வெளியீட்டை மாற்றி வைக்கும்படி அவரிடம் கேட்டதாகவும் சொல்லப்படுகிறது. அதற்கு ராதே ஷ்யாம் பட தயாரிப்பாளரை பொறுத்தவரை நீண்ட நாட்கள் அந்தப்படம் தயாரிப்பில் இருந்ததால் அந்தப்படத்தின் ரிலீஸ் தேதியை மாற்றுவதற்கு வாய்ப்பில்லை என பிரபாஸ் கைவிரித்து விட்டதாகவும் சொல்லப்படுகிறது.