சவால் தான்... ஆனாலும் மகிழ்ச்சியே... - தமன்னா | 'கல்கி 2898 ஏடி' ரிலீஸ் ஜூன் 27-க்கு தள்ளிப்போனது | விஜய் பிறந்தநாளில் வெளியாகும் கோட் இரண்டாவது பாடல் | அல்லு அர்ஜூன் சம்பளம் ரூ.150 கோடியா... | நெல்சன் - விஜய்யின் கனவு படத்தில் யாரெல்லாம் நடிக்கிறார்கள் தெரியுமா ? | சிவசக்தியாக உருமாறிய தமன்னா | மம்முட்டிக்கு மாற்றாக நடிக்க பாலிவுட்டில் யாரும் இல்லை : வித்யாபாலன் பாராட்டு | சர்ச்சை நடிகருக்கு முன்பாக வேறு நடிகர் : புஷ்பா இயக்குனர் புது தகவல் | கேங்ஸ்டர் ரங்காவுக்கு ஏன் பிளாஷ்பேக் இல்லை ? ; ஆவேசம் இயக்குனர் | கவனம் பெறும் ‛ஸ்டார்' டிரைலர் : வெவ்வேறு லுக்கில் அசத்தும் கவின் |
முதன்முறையாக ஜீவாவை வைத்து கவுதம் மேனன் இயக்கியுள்ள படம் நீதானே என் பொன்வசந்தம். இப்படத்தில் ஜீவா ஜோடியாக சமந்தா நடித்துள்ளார். இவர்களுடன் சந்தானமும் நடித்துள்ளார். ஆர்.எஸ்.இன்போடெயின்மென்ட் மற்றும் போட்டோன் கதாஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள இப்படத்திற்கு இளையராஜா இசையமைத்துள்ளார். இதுவரை ஹாரிஸ் மற்றும் ஏ.ஆர்.ரஹ்மானை மட்டுமே தமது படங்களில் இசையமைக்க வைத்த கவுதம், முதன்முறையாக இளையராஜாவுடன் கைகோர்த்துள்ளார். பாட்டும் நன்றாக வந்துள்ளது. டிசம்பர் 14(நாளை) முதல் படம் உலகம் முழுக்க ரிலீஸ் ஆக உள்ளது.
இந்நிலையில் இப்படத்தில் நடித்த அனுபவம் பற்றி நடிகர் ஜீவா கூறுகையில், கோ படத்திற்கு டைரக்டர் கவுதம் மேனனை பார்த்து, சார் நம்ம இரண்டு பேரும் சேர்ந்து படம் பண்ணலாமா என்று கேட்டேன். உடனே அவரும் பண்ணலாம். நல்ல ஒரு லோக்கல் கதையா பண்ணலாமா என்று கேட்டார். நான் வேண்டாம் ஒரு ஸ்டைலீஷான கதை பண்ணலாம் என்று கூறினேன். அப்படி ஸ்டைலீஸாக உருவான படம் தான் இந்த நீதானே என் பொன்வசந்தம். பள்ளி, கல்லூரி மற்றும் வேலைக்கு போகும் இளைஞன் என மூன்று மாறுபட்ட கதாபாத்திரங்களில் நடித்துள்ளேன். கிட்டத்தட்ட ஒன்றரை வருடம் இந்தப்படத்திற்காக உழைத்துள்ளேன். இந்தப்படத்தை பார்க்கும் போது, நம்ம லைப்பில் நடந்த கதை மாதிரி இருக்கே என்று படம் பார்ப்பவர்களுக்கு புரியும். நீதானே என் பொன்வசந்தம் என்னுடைய கேரியரில் முக்கியமான படம். நான் நடித்த ஈ உள்ளிட்ட பல படங்களில் ஒயின்ஷாப் சம்பந்தப்பட்ட காட்சி ஏதாவது வரும். ஆனால் இந்தப்படத்தில் அப்படி இருக்காது. ஒயின்ஷாப்பில் இருந்த என்னை காபி ஷாப்புக்கு அழைத்து வந்து இருக்கிறார் கவுதம் மேனன். இந்தபடத்திற்கு ராஜா சார் மியூசிக் அமைத்துள்ளார். எத்தனையோ பெரிய பெரிய நடிகர்களுக்கு எல்லாம் இசையமைத்த அவர், எனது படத்திற்கும் இசையமைத்துள்ளார் என்று நினைக்கும் போதும் பெருமையாக உள்ளது என்று கூறியுள்ளார்.