குட் பேட் அக்லி டிரைலர் வெளியானது : நிச்சயம் அஜித் ரசிகர்களுக்கு கொண்டாட்டமே...! | ஆக.,14ல் 'கூலி' ரிலீஸ்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு | ஜிவி பிரகாஷ், சைந்தவி விவாகரத்து வழக்கு: செப்.25ல் நேரில் ஆஜராக உத்தரவு | சத்யராஜ், காளி வெங்கட் இணைந்து நடிக்கும் 'மெட்ராஸ் மேட்னி' | மே மாதத்தோடு விஜய்யின் 'ஜனநாயகன்' படப்பிடிப்பு முடிவடைகிறது! | சோபிதா துலிபாலாவின் அடுத்த தமிழ் படம்! | ரேஸ் காரை ஓட்டும் அஜித்தின் மகன் ஆத்விக்! வைரலாகும் வீடியோ!! | எதிர்பார்த்ததை விட பாசிட்டிவான விமர்சனங்கள் - விக்ரம் வெளியிட்ட வீடியோ! | பரபரப்பில்லாமல் இன்றைய வெளியீடுகள் | ஆறு மாதங்கள் தள்ளிப் போனது 'இட்லி கடை' |
நடனம், நடிப்பு என திரை குடும்பத்தில் இருந்து தானும் நடன கலைஞராக வளர்ந்து, அமெரிக்கா வரை கோலிவுட்டின் பெருமையை அறியச் செய்து, டேக் இட் ஈஸி என்ற ஹாலிவுட் படத்தை இயக்கிய நடன இயக்குனர் ரகுராம் மகள் சுஜா ரகுராம் பேசுகிறார்...
உங்களுடைய சினிமா பயணம் எப்படி
நான் அமெரிக்கா வந்து 19 ஆண்டுகளாகிறது. நடனபள்ளி, நியூயார்க் பிலிம் அகாடமியில் போட்டோ, வீடியோகிராபி படிச்சேன். ஹாலிவுட் இயக்குனர்களிடம் வேலை பார்த்தேன். தற்போது நான் இயக்கி, கணவர் மனோஜ் தயாரித்த டேக் இட் ஈஸி படம் ரிலீஸ் ஆகிறது.
ஹாலிவுட் சினிமா இயக்கம் குறித்து
நிறைய பேப்பர் ஒர்க் இருக்கும். கதையை நடிகர்களை படிக்க வைத்து, படப்பிடிப்பு போகும் முன் எல்லா துறையினரும் தயார் நிலையில் இருப்பர். நம் நாட்டு சினிமாவிற்கும், ஹாலிவுட்டிற்கும் சில வித்தியாசங்கள் தான் உள்ளது.
இந்த படத்தில் உங்கள் மகன், மகள் நடித்தது
மகன் அமெரிக்கால காலேஜ் படிப்பு மீடியா பற்றி தான் படித்தார். மகளும் முக்கிய கேரக்டரில் நடிச்சிருக்காங்க. இருவரும் ஆடிஷன்ல செலக்ட்டாகி நடிக்க வந்தாங்க. நட்பை சொல்லும் கதை இந்த படம்.
படத்திற்கு சாம்.சி எஸ் இசையமைப்பாளர்
இயக்குனர் ஏ.எல்.விஜய் தான் சாம் பற்றி சொன்னார். முக்கியமான பாட்டுக்கு சாம் இசை அமைத்துள்ளார். பிற பாடல்களுக்கு அமெரிக்க தமிழர் ரமேஷ் குமார் கண்ணன் இசையமைத்தார்.
உங்களிடம் தமிழ் படம் எதிர்பார்த்தோம்
அமெரிக்காவில் இருப்பதால் ஆங்கிலத்தில் எடுத்தேன். இந்தியா வந்து தான் தமிழ் படம் இயக்க வேண்டும் என்றில்லை. ஆங்கிலத்தில் இயக்கி, தமிழில் டப் பண்ணலாம்.
அமெரிக்காவில் கொரோனா நேரம் படம்
கடைசி பாட்டு எடுக்கும் போது ரொம்ப சிரமப்பட்டேன். நிறைய சட்டதிட்டங்களை மதித்து பண்ண வேண்டி இருந்தது. ஒரு டான்ஸர் கூட மாஸ்க் எடுக்க மாட்டாங்க. அவங்களுக்கு சம்மதிக்க வைப்பது கஷ்டம்
அப்பா ரகுராம் மாஸ்டரிடம் கற்ற விஷயம்
அப்பா 1500, அம்மா 800 படங்களுக்கு நடனம் அமைத்திருக்காங்க. இவர்கள், கலா மாஸ்டரிடம் உதவி நடன கலைஞராக இருந்திருக்கேன். அப்பா, அம்மா ரொம்ப கண்டிப்பு, வேலை பார்ப்பது கஷ்டம். கமல் என் குரு. ரஜினி அமெரிக்கா வந்த போது வீட்டிற்கு வந்து படக்குழுவுக்கு வாழ்த்து கூறினார்.