'மதராஸி' படத்தின் முதல் பாடல் எப்போது? | அனுஷ்கா உடன் மோதும் ராஷ்மிகா! | சூர்யாவின் 50வது பிறந்த நாளில் வெளியாகும் 'கருப்பு' படத்தின் டீசர்! | விஜய் சேதுபதியின் 'தலைவன் தலைவி' டிரைலர் வெளியானது! | சிவகார்த்திகேயன் - வெங்கட்பிரபு இணையும் படம் அக்டோபரில் தொடங்குகிறது! | ரஜினி, மோகன்லால் பாணியில் கமலும்... | ஜனாதிபதி மாளிகையில் திரையிடப்பட்ட ‛கண்ணப்பா' | பணி இரண்டாம் பாக டைட்டிலை அறிவித்த ஜோஜூ ஜார்ஜ் | நடிகர் கிங்காங் வீட்டிற்கே சென்று மணமக்களை வாழ்த்திய சிவகார்த்திகேயன் | டெங்கு காய்ச்சல் : மருத்துவமனையில் விஜய் தேவரகொண்டா அனுமதி |
மலையாளத்தில் வெளியான ஒரு அடார் லவ் என்ற படத்தில் புருவத்தை தூக்கி கண்ணடித்ததன் மூலமாக உலகம் முழுதும் ஒரே இரவில் டிரெண்டிங்கில் வந்தவர் நடிகை பிரியா வாரியர். சமூக வலைதளத்தில் மட்டும் இவரை 70 லட்சம் பேர் பின் தொடர்ந்து வருகிறார்கள். ஒரு அடார் லவ் படத்தில் நடித்ததன் மூலம் இவருக்கு பாலிவுட் படத்தில் வாய்ப்பு கிடைத்தது. மறைந்த நடிகை ஸ்ரீதேவி வாழ்க்கை வரலாறாக எடுக்கப்பட்ட ஸ்ரீதேவி பங்களா என்ற படத்தில் ஸ்ரீதேவி கதாபாத்திரத்தில் நடித்த பிரியா வாரியர் மோசமான ஆடைகளிலும் நடித்திருந்ததால் ஸ்ரீதேவியை அவதூறு செய்வது போல் இருக்கிறது என்று ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இதனால் இந்த படத்திற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. அதேபோல ஒரு அடார் லவ் படத்திலேயே உதட்டு முத்த காட்சியில் நடித்திருந்த பிரியா வாரியர், ஸ்ரீதேவி பங்களா நடித்திருந்த நீச்சல் உடையிலும், மது அருந்தும் காட்சிகளிலும், புகை பிடிப்பது போன்ற காட்சிகளில் நடித்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
சமீபத்தில் சில நாட்கள் இன்ஸ்டாகிராம் பக்கத்தை கூட முடக்கி இருந்தார். சில நாட்களுக்கு முன்னர் மீண்டும் இன்ஸ்டாவில் இணைந்த பிரியா வாரியார் அடிக்கடி தனது கவர்ச்சியான புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார். ஓணம் பண்டிகையை முன்னிட்டு இவர் சில புகைப்படங்களை பதிவிட்டு இருந்தார். இதை பார்த்த பலரும் இவரை லேடி கெட்டப் போட்ட பிரசாந்த், வையாபுரியின் புகைப்படங்களை போட்டு கிண்டல் செய்து வருகின்றனர்.