ஒரே மாதத்தில் திரைக்கு வரும் கிர்த்தி ஷெட்டியின் மூன்று படங்கள் | 100 பேர் வந்தாலும்....! பிரதீப் ரங்கநாதனின் 'டியூட்' படத்தின் டிரைலர் வெளியானது! | ஆனந்த்.எல்.ராய் இயக்கத்தில் இணையும் முன்னனி நடிகைகள் | இம்மாதத்தில் ஓடிடியில் வெளியாகும் 'லோகா, இட்லிகடை' | 500 கோடி வசூலை நோக்கி 'காந்தாரா சாப்டர் 1' | அரசன் படத்தின் புதிய அப்டேட் : சுதீப் இணைய வாய்ப்பு | சிவகார்த்திகேயன் உடன் இணையும் ஸ்ரீ லீலா | பைசன் படத்தின் தணிக்கை சான்று மற்றும் ‛ரன்னிங் டைம்' | நான் அசாம், தாய்மொழி நேபாளம் : கயாடு லோகர் புது தகவல் | பாபாஜி குகையில் ரஜினி தியானம், வழிபாடு |
இந்தியன் 2 படத்தை இயக்கி வந்த ஷங்கர், தயாரிப்பு நிறுவனம் லைகாவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, அப்படத்தை கைவிட்டு தெலுங்கில் ராம் சரண் நடிப்பில் ஒரு படத்தை இயக்கி வருகிறார்.
இந்தப் படத்தில் கொரியன் சிங்கர் சூஷி பே முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறார். அதோடு, படத்தில் நாயகியாக அலியாபட், கியாரா அத்வானி , மாளவிகா மோகனன் ஆகியோரிடம் பேச்சுவார்த்தை நடந்தது. இந்தியா முழுவதும் படம் வெளியாக இருப்பதால் அனைத்து மொழி ரசிகர்களுக்கும் பரிட்சயமான நாயகியாக வேண்டுமென படக்குழு விரும்பியது. இறுதியாக, க்யாரா அத்வானி நாயகியாக ஒப்பந்தமாகியிருக்கிறார்.
கூடுதலாக, இன்னொரு நாயகியும் படம் இருக்கிறார். முதலில், இந்த வேடத்துக்கு தெலுங்கு நடிகை ராஷ்மிகா மந்தனாவிடம் பேச்சுவார்த்தை நடத்தியிருக்கிறார்கள். இப்போதைக்கு, தெலுங்கின் முன்னணி நடிகையான இவரை, ஷங்கர் படத்தில் நடிக்க வைக்க விரும்பினார்கள். ஆனால், பெரும் தொகையை சம்பளமாகக் கேட்டிருக்கிறார் ராஷ்மிகா. அதோடு, சில கட்டுப்பாடுகளும் போட்டதாகத் தெரிகிறது. இதனால், ராஷ்மிகாவை நிராகரித்து விட்டாராம் ஷங்கர்.பின்னர், ராஷ்மிகா ரோலுக்கு நடிகை அஞ்சலியை ஒப்பந்தம் செய்துள்ளனர்.