விக்ரம் 63வது படத்தை இயக்கும் அறிமுக இயக்குனர் | என்னுடைய டேஸ்ட்டே வேற! சொல்கிறார் ஸ்ரீ லீலா | கவுரி கிஷனின் பேராசை | திரையரங்குகளில் வசூலை வாரி குவிந்த படங்கள்....இந்த வார ஓடிடி ரிலீஸ்.......! | மாத செலவுக்கு ரூ.6.5 லட்சம் மாதம்பட்டி ரங்கராஜ் தர வேண்டும்; ஜாய் கிரிசில்டா மனு | ராஷ்மிகாவுக்கு ஜோடியாக கன்னட நடிகர் ஏன் ? ; 'தி கேர்ள் பிரண்ட்' இயக்குனர் விளக்கம் | மகேஷ் பாபு குடும்பத்திலிருந்து ஒரு கதாநாயகி | தொடர்ந்து தெலுங்கு இயக்குநர்களிடம் கதை கேட்கும் சூர்யா | லோகேஷ் கனகராஜ் ஜோடியான வாமிகா கபி | மீண்டும் ரஜினியுடன் இணையும் சந்தானம் |

எண்பதுகளில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி சீரியல், சினிமா என நடிகையாக மாறியவர் நடிகை சித்ரா. நல்லெண்ணெய் விளம்பரம் ஒன்றில் நடித்ததால் நல்லெண்ணெய் சித்ரா என ரசிகர்களால் அறியப்பட்ட இவர், கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு திடீர் மாரடைப்பால் மரணம் அடைந்தார். அவரது மறைவு திரையுலகிற்கு பேரதிர்ச்சி கொடுத்த நிலையில், பலரும் தங்களது வருத்தத்தையும் இரங்கலையும் தெரிவித்து வந்தனர்.
இந்த நிலையில் முதல் மரியாதை, கடலோரக் கவிதைகள் படங்களில் நடித்து எண்பதுகளில் இன்னொரு முன்னணி நடிகையாக வலம் வந்த ரஞ்சனி என்பவர் சித்ராவின் மறைவிற்கு உருக்கமான இரங்கல் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்த பதிவில், பேசுவதற்கு வார்த்தைகள் இல்லை எனது இன்னொரு அருமையான தோழியையும் இழந்து நிற்கிறேன். கடைசிவரை அவருடன் தொடர்பில் இருந்து வந்தேன். உன்னுடைய குறுங் செய்திகளும் உன்னுடைய வாய்ஸும் எப்போதும் என்னுடன் இருக்கும், என் இதயத்தில் எப்போதும் உனக்கு ஒரு இடம் உண்டு என கூறியுள்ளார். இவர்கள் இருவரும் மலையாளத்தில் ராஜ வாழ்க்கை என்கிற படத்தில் இணைந்து நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.