'மாரீசன்' படம் ஜூலை 25ல் வெளியாகிறது | ராஜமவுலி படம் மூலம் இந்திய திரையுலகிற்கு திரும்புவது உற்சாகம் : பிரியங்கா சோப்ரா | 7500 தியேட்டர்களில் வெளியாகும் வார் 2 | கால வரையறையின்றி ஒத்திவைக்கப்பட்ட அனுஷ்காவின் ‛காட்டி' | ஹீரோவாகும் ‛டூரிஸ்ட் பேமிலி' இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் | வேள்பாரி நாவலில் ரஜினிகாந்த்? | பாராட்டுக்கள் கிடைத்தும் வசூலை அள்ளாத 'கண்ணப்பா' | 50வது நாளைக் கடந்த 'மாமன்', நன்றி தெரிவித்த சூரி | ஹரிஹர வீரமல்லு : யு டியூபில் மட்டும் 60 மில்லியன் பார்வைகள் | 'சப்தம்' படத்தை ஓடிடியில் வெளியிட நீதிமன்றம் தடை |
தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலையின் காரணமாக கடந்த நான்கு மாதங்களாக மூடப்பட்டிருந்த தியேட்டர்கள் இன்று(ஆக., 23) முதல் திறக்கப்படுகின்றன. இரு தினங்களுக்கு முன்புதான் இந்த அறிவிப்பு என்பதால் உடனடியாகத் திறக்கப்பட உள்ள தியேட்டர்களின் எண்ணிக்கை குறைவாகவே இருக்கும் எனத் தெரிகிறது. வரும் வெள்ளிக்கிழமை முதல் தான் அதிக தியேட்டர்கள் திறக்கப்படும் எனத் தெரிகிறது.
இன்று திறக்கப்படும் தியேட்டர்களிலும் படங்களைத் திரையிட புதிய படங்கள் எதுவும் இல்லை. எனவே, இதற்கு முன்பு வெளியான சில தமிழ்ப் படங்களையும், வேற்று மொழிப் படங்களையும்தான் இன்று திரையிட உள்ளார்கள்.
ஹிந்திப் படமான 'பெல்பாட்டம்', ஹாலிவுட் படமான 'கோட்சில்லா Vs கிங்காங்', தமிழ்ப் படமான 'பாரிஸ் ஜெயராஜ்', உள்ளிட்ட படங்களுக்கு சென்னையில் மட்டுமே ஆன்லைன் மூலம் முன்பதிவு நடைபெறுகிறது. மற்ற மாநகரங்கள், நகரங்களுக்கான முன்பதிவுகளை ஆன்லைன் முன்பதிவுகள் திறக்கப்படவில்லை.
கொரானோ முதல் அலைக்குப் பின் கடந்த வருடம் நவம்பர் மாதம் 50 சதவீத இருக்கைகளுடன் தியேட்டர்கள் திறக்கப்பட்ட போது, அடுத்த சில நாட்களிலேயே ஐந்து படங்கள் வெளிவந்தன. அதன்பின் டிசம்பர் மாதம் வரையிலும் சின்னச் சின்ன படங்கள்தான் அதிகமாக வந்தன. இந்த வருடப் பொங்கலை முன்னிட்டு வெளிவந்த 'மாஸ்டர்' படத்திற்குப் பிறகுதான் மக்கள் தியேட்டர்களுக்கு அதிகமாக வந்தனர்.
அது போல இந்த வாரம் வெள்ளிக்கிழமை சில புதிய படங்கள் வெளிவந்தால் மட்டுமே மக்கள் ஓரளவிற்காக தியேட்டர்களுக்கு வருவார்கள். 'அண்ணாத்த, வலிமை' போன்ற பெரிய படங்கள் வந்தால்தான் மக்களை தியேட்டர்களுக்கு அதிகம் வரவழைக்க முடியும் என தியேட்டர்காரர்களே தெரிவிக்கிறார்கள்.