'மாரீசன்' படம் ஜூலை 25ல் வெளியாகிறது | ராஜமவுலி படம் மூலம் இந்திய திரையுலகிற்கு திரும்புவது உற்சாகம் : பிரியங்கா சோப்ரா | 7500 தியேட்டர்களில் வெளியாகும் வார் 2 | கால வரையறையின்றி ஒத்திவைக்கப்பட்ட அனுஷ்காவின் ‛காட்டி' | ஹீரோவாகும் ‛டூரிஸ்ட் பேமிலி' இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் | வேள்பாரி நாவலில் ரஜினிகாந்த்? | பாராட்டுக்கள் கிடைத்தும் வசூலை அள்ளாத 'கண்ணப்பா' | 50வது நாளைக் கடந்த 'மாமன்', நன்றி தெரிவித்த சூரி | ஹரிஹர வீரமல்லு : யு டியூபில் மட்டும் 60 மில்லியன் பார்வைகள் | 'சப்தம்' படத்தை ஓடிடியில் வெளியிட நீதிமன்றம் தடை |
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், விஜய சேதுபதி, மாளவிகா மோகனன் நடிப்பில் வெளியான படம் மாஸ்டர். தமிழில் வெற்றி பெற்ற இப்படத்தின் ஹிந்தி ரீமேக்கில் சல்மான்கான் நடிக்கயிருப்பதாக செய்திகள் வெளியாகி வந்தன. ஆனால் இப்போது அந்த படத்தில் நடிக்க மறுத்து விட்டதாக பாலிவுட்டில் செய்திகள் வெளியாகியுள்ளன.
காரணம் சமீபகாலமாக ஹிந்தியில் சல்மான்கான் நடிப்பில் வெளியான படங்கள் தொடர்ச்சியாக தோல்வியடைந்து வருகின்றன. கடைசியாக பிரபு தேவா இயக்கத்தில் அவர் நடித்த ராதே படமும் ஓட வில்லை. அதனால் அடுத்தபடியாக வித்தியாசமான கதைகளில் மட்டுமே நடிப்பது என்று முடிவு வெடுத்துள்ள சல்மான்கானுக்கு, மாஸ்டர் படத்தின் கதையில் சில மாற்றங்களை பண்ண சொன்னார். ஆனால் அப்படி மாற்றியும் அவருக்கு திருப்தி ஏற்படவில்லை. இதனால் மாஸ்டர் ஹிந்தி ரீமேக்கில் நடிக்க அவர் மறுத்திருப்பதாக கூறப்படுகிறது.