நள்ளிரவில் சுவாசிகாவுக்கு மெசேஜ் அனுப்பி சந்தேகம் கேட்ட ஐஸ்வர்ய லட்சுமி | அப்பா உடன் நடிக்க நான் ரெடி : ஸ்ருதிஹாசன் | பராசக்தி படப்பிடிப்பு நிறுத்தப்பட்டதா? : இயக்குனர் சுதா விளக்கம் | ரூ.75 கோடி வசூலைக் கடந்த டூரிஸ்ட் பேமிலி | 23 ஆண்டுகளுக்கு பிறகு விஜய் படத்தில் இணைந்த ரேவதி | மலையாளத்தில் அடியெடுத்து வைத்த காந்தாரா இசையமைப்பாளர் | ஆபாச மார்பிங் வீடியோ : சைபர் கிரைமில் கிரண் புகார் | ரஜினியின் கூலி படத்தின் மேக்கிங் வீடியோ வெளியானது | நாளை வெளியாகும் வனிதா விஜயகுமார் படத்தின் ஆடியோ, டிரைலர் | 16 ஆண்டுகள் கழித்து தந்தையின் படத்திற்காக பாடிய ஸ்ருதிஹாசன் |
தெலுங்கு, தமிழ், மலையாளம், கன்னடம் என தென்னிந்திய மொழிகள் அனைத்திலும் மோஸ்ட் வான்டட் வில்லன் நடிகராக நடித்து வருபவர் ஜெகபதிபாபு. அந்த வகையில் தற்போது சிவா இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து வரும் அண்ணாத்த படத்தில் வில்லனாக வேடத்தில் நடித்து வருகிறார் ஜெகபதிபாபு. லிங்கா படத்தை தொடர்ந்து ரஜினியுடன் மீண்டும் இணைந்து நடிக்கும் ஜெகபதிபாபு, இன்னொரு பக்கம் விசுவாசம் படத்தை தொடர்ந்து சிவா இயக்கத்தில் மீண்டும் இந்தப்படத்தில் நடிக்கிறார்.
தற்போது சாலையோர கடை ஒன்றில் கசங்கிய உடையுடன் ஜெகபதிபாபு சிற்றுண்டி சாப்பிடுவது போன்ற ஒரு புகைப்படம் தற்போது சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தற்போது லக்னோவில் நடைபெறும் அண்ணாத்த படப்பிடிப்பின்போது அதில் கலந்து கொண்ட ஜெகபதிபாபு அங்கே உள்ள சாலையோர கடையில் ஸ்னாக்ஸ் சாப்பிட்டார் என்றும் அப்போது எடுத்த படம் என்றும் ஒரு தகவல் பரவியது.
அவர் அப்படி சாலையோர கடையில் சாப்பிட்டது உண்மைதான்.. ஆனால் அது அண்ணாத்த படப்பிடிப்பு சமயத்தில் அல்ல. தற்போது அவர் ஜூனியர் என்டிஆர் உடன் இணைந்து நடித்து வரும் படத்தின் படப்பிடிப்பில் தான் என தெலுங்கு திரையுலகில் இன்னொரு தகவல் பரவி வருகிறது.