மணிரத்னம் அடுத்த படம் குறித்து தகவல் இதோ | மலையாள ரீமேக் படத்தில் நடிக்கும் விமல் | மீண்டும் இணையும் எழில், விஷ்ணு விஷால் கூட்டணி | பால்டப்பாவை இயக்கும் விஜய் மில்டன் | சாய் தன்ஷிகாவை திருமணம் செய்கிறார் நடிகர் விஷால்.? | கடந்தவாரம் வெளியான படங்களுக்கு வரவேற்பு எப்படி | பிளாஷ்பேக்: பொன்விழா ஆண்டில் எம்ஜிஆர்.,ன் “நினைத்ததை முடிப்பவன்” | 'ஜெயிலர் 2' படப்பிடிப்பு தளத்தில் ரஜினியை சந்தித்த வீரதீர சூரன் வில்லன் நடிகர் | சூர்யா 46 இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ்குமார் | ஹைதராபாத்தில் நடந்த சூர்யாவின் அடுத்த பட பூஜை |
சிவா இயக்கத்தில் ரஜினி, மீனா, குஷ்பு, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், பிரகாஷ்ராஜ், சூரி என பலர் நடித்து வரும் படம் அண்ணாத்த. டி.இமான் இசையமைக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு லாக் டவுன் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. அதையடுத்து ஐதராபாத்திலுள்ள ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் மீண்டும் டிசம்பர் 13-ந்தேதி படப்பிடிப்பு தொடங்கியது. ரஜினி உள்பட பிரபலங்கள் தனி விமானத்தில் அழைத்து செல்லப்பட்டனர்.
ஆனால் அங்கு ஒருவார காலம் படப்பிடிப்பு நடந்து வந்த நிலையில், 4 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதோடு ரஜினிக்கும் ரத்த அழுத்த மாறுபாடு ஏற்பட்டதால் படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டது. தற்போது சென்னையில் படப்பிடிப்பு துவங்கி உள்ளது.
இந்த நிலையில் இப்படத்தில் தெலுங்கு நடிகர் ஜெகபதிபாபு நடிப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சமீபகாலமாக அவர் வில்லன் வேடங்களிலேயே அதிகமாக நடித்து வருவதால் இப்படத்திலும் வில்லனாகவே நடிப்பார் என்று தெரிகிறது.