ஜனநாயகன் பட வழக்கில் ஜன., 27ல் தீர்ப்பு | அஜித் 64ல் நிறைய சர்ப்ரைஸ் இருக்கு : ஆதிக் ரவிச்சந்திரன் | மீண்டும் ஒரு தெலுங்கு படத்தில் நடிக்கும் பிரீத்தி முகுந்தன் | மணிகண்டன் படத்தை இயக்கும் தேசிங்கு பெரியசாமி | விஜய்க்கு தம்பியாக தனுஷ் : இயக்குனர் ஏ.வெங்கடேஷ் சொன்ன தகவல் | கவின் படத்தில் இணைந்த சிம்ரன் | கேரள தேர்தலில் போட்டியிடுகிறேனா : பாவனா பதில் | 32 வருடங்களுக்குப் பிறகு 4வது முறையாக அடூர் கோபாலகிருஷ்ணன் உடன் இணையும் மம்முட்டி | மலையாளத்தில் காளிதாஸ் ஜெயராமின் புதிய படப்பிடிப்பு துவங்கியது | 84 கோடி ரூபாய் நஷ்ட ஈடு வழக்கு : தனுஷ் பட இயக்குனர் விளக்கம் |

இருட்டு அறையில் முரட்டுக்குத்து, ஜாம்பி உள்பட சில படங்களில் நடித்தவரான யாஷிகா ஆனந்த், தற்போது பாம்பாட்டம், சல்பர் போன்ற படங்களில் நடித்து வருகிறார். சோசியல் மீடியாவில் தனது அதிரடியான போட்டோக்களை வெளியிட்டு ரசிகர்களை தொடர்ந்து கிறங்கடித்து வருகிறார்.
இந்தநிலையில் துபாய் சென்றிருந்தபோது விமானத்தில் பறந்தபடி ஸ்கை டைவிங் செய்யும் ஒரு வீடியோவை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார் யாஷிகா. வானில் பறந்தபடி எந்தவித பயமும் இல்லாமல் உற்சாகத்துடன் ஸ்கை டைவிங் செய்துள்ளார். அதோடு, ''திஸ் இஸ் கிரேசி, நான் செய்ய நினைத்ததில் இதுவும் ஒன்று'' என்றும் பதிவிட்டுள்ளார். யாஷிகாவின் இந்த துணிச்சலான செயல் ரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது.




