‛கூலி' படத்திலிருந்து ‛மோனிகா' பாடல் வெளியீடு | கொடைக்கானல் மலை கிராமம் பின்னணியில் உருவாகும் 'கெவி' | மகிழ்ச்சியாக இருக்கிறேன், பேச்சு வரலை : விஜய்சேதுபதி மகன் உருக்கம் | வித்யா பாலனுக்கு நன்றி சொன்ன மலையாள காமெடி நடிகர் | திருமணத்தின் போதே கர்ப்பமாக இருந்தேன் ; பாலிவுட் நடிகை நேஹா துபியா ஓபன் டாக் | காலில் செருப்பு அணியாமல் என்னை பக்குவப்படுத்திக் கொள்கிறேன் : விஜய் ஆண்டனி | பூட்டிய வீட்டில் இறந்து கிடந்த பாக்., நடிகை; 9 மாதங்களுக்கு பிறகே கண்டுபிடித்த போலீசார் | மேலாளரை உன்னி முகுந்தன் தாக்கவில்லை ; நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பித்த போலீசார் | ரஜினி ஒரு புத்திசாலி, கத்தியைப் போல கூர்மையானவர் : ஸ்ருதிஹாசன் | அல்லு அர்ஜுன், அட்லி படத்தில் வில்லனாகும் ஹாலிவுட் நடிகர் |
கேரளா மக்களை பொறுத்தவரை ஓணம் திருநாள் கொண்டாட்டம் என்றால் அது அறுசுவை விருந்து சமைத்து உண்பதும், அன்றைய தினம் வெளியாகியுள்ள புதிய படங்களை தியேட்டர்களுக்கு குடும்பத்துடன் சென்று கண்டுகளிப்பதும் என இவை இரண்டும் தான் அன்றைய நாளை முழுமியாயானதாக்கும். ஆனால் தற்போது கேரளாவில் ஓணம் பண்டிகை களைகட்ட துவங்கி விட்டாலும் கூட, திரையுலகை பொறுத்தவரை கொரோனா இரண்டாவது அலை காரணமாக கடந்த வருடத்தை போல இந்த வருடமும் தியேட்டர்கள் திறப்பின்றி டல்லடித்தே கிடக்கிறது.
ஓணம் பண்டிகை முக்கிய நாள்.. என்றாலும் மலையாள ரசிகர்கள் ஓணம் பண்டிகையை முழுமையாக கொண்டாட முடியாத ஏக்கத்திலும் வருத்தத்திலும் இருக்கிறார்கள். அவர்கள் மனக்குறையை ஓரளவு தீர்ப்பது போல கடந்த சில நாட்களுக்கு முன் பிரித்விராஜ் நடித்த 'குருதி' திரைப்படம் ஒடிடி தளத்தில் வெளியானது. இதோ தற்போது சிறிய நடிகர்கள் நடித்துள்ள 'ஹோம்' என்கிற படம் ஓடிடியில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது..
அந்தவகையில் மலையாள ரசிகர்கள் பலரும் இந்த ஓணம் பண்டிகையை ஒடிடியில் ஏற்கனவே வெளியான தங்களுக்கு பிடித்தமான படங்களை பார்த்து ஓரளவுக்கு மன திருப்தி அடைந்து வருகிறார்கள். மேலும் அய்யப்பனும் கோஷியும், ஆண்ட்ராய்டு குஞ்சப்பன், தண்ணீர் மாத்தன் தினங்கள், போக்கிரி ராஜா, புலிமுருகன் என முந்தைய ஹிட் படங்களை பார்க்கும் பார்வையாளர்களின் எண்ணிக்கையும் இந்த ஓணம் பண்டிகை சீசனில் அதிகரித்துள்ளதாம்.