லோகா படத்தின் இரண்டாம் பாகம் அறிவிப்பு | 'ஓஜி' வரவேற்பு : ஸ்ரேயா ரெட்டி மகிழ்ச்சி | குடும்பத்துடன் குலதெய்வம் கோவிலில் தரிசனம் செய்த தனுஷ் | துபாயில் சொகுசு கப்பலா... : மாதவன் கொடுத்த விளக்கம் | அருண் விஜய் படத்திற்கு முதல் விமர்சனம் தந்த தனுஷ் | சரஸ்வதி படத்தின் மூலம் இயக்குனர் ஆகும் நடிகை வரலட்சுமி | சாந்தனுவின் ஏக்கம் தீருமா | 'கந்தாரா சாப்டர் 1' போட்டியை சமாளிக்குமா 'இட்லி கடை' | ஹிந்தி பிக்பாஸ் சீசன் 19 நிகழ்ச்சியின் மீது 2 கோடி நஷ்ட ஈடு கேட்டு வழக்கு | மோகன்லாலுக்கு விருது கிடைத்ததை கொண்டாடிய திரிஷ்யம் படக்குழு |
திருமணம் தொடரின் மூலம் ரியல் ஜோடிகளான ஸ்ரேயா - சித்து தற்போது புதிய வலை தொடரில் மீண்டும் ரீல் ஜோடிகளாக இணைகின்றனர்.
கலர்ஸ் தமிழில் ஒளிபரப்பான திருமணம் தொடரில் ஒன்றாக நடித்த ஸ்ரேயா அஞ்சன் மற்றும் சித்து, அந்த தொடர் முடிந்த பின் வாழ்க்கையிலும் ஜோடிகளாக ஒன்றிணைந்தார்கள். அதன் பிறகு விஜய் டிவியில் ராஜா ராணி தொடரில் சித்துவும் அன்புடன் குஷி தொடரில் ஸ்ரேயா அஞ்சனும் நடித்து வந்தனர். இருப்பினும் திரையில் இவர்களது ஜோடியை மீண்டும் காண ரசிகர்கள் காத்திருந்தனர். அவர்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றும் வகையில் ஸ்ரேயா - சித்து ஜோடி தற்போது மீண்டும் இணைந்துள்ளனர்.
குக் வித் காதல் என்கிற வலை தொடரில் ஸ்ரேயா சித்து இருவரும் மீண்டும் ஜோடியாக நடிக்கின்றனர். இந்த தொடருக்கான பூஜை போடப்பட்டு படப்பிடிப்பும் பொள்ளாச்சியில் நடந்து வருகிறது. இந்த ஜோடிகள் இருவரும் ஷூட்டிங் ஸ்பாட்டில் இருந்து வீடியோக்களையும் புகைப்படங்களையும் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.