கண்ணப்பா ரிலீஸ் தள்ளிப்போனது : காரணம் இது தான் | விஷாலுக்கு ஜோடியாகும் துஷாரா விஜயன் | 'பேடி' படத்தின் புதிய அப்டேட் | தொடரும் பூரி ஜெகன்னாத், சார்மி தயாரிப்பு நட்பு : விஜய் சேதுபதி ஹீரோ | ஷங்கர் அடுத்து 'அவுட்டேட்டட்' பட்டியலில் இணைந்த ஏஆர் முருகதாஸ் | சர்தார் 2 - யுவனுக்குப் பதிலாக சாம் சிஎஸ் | எல் 2 எம்புரான் - 2 நிமிடக் காட்சிகள் நீக்கம் | தனுஷ், விக்னேஷ் ராஜா படத்தில் இணைந்த ஜெயராம்! | அஜித்தின் புது அவதாரம்: ஆதிக் பகிர்ந்த போட்டோ வைரல் | 'எல் 2 எம்புரான்' சர்ச்சை: மோகன்லால் புதிய பதிவு |
ஹிந்தியில் ஆயுஷ்மான் குரானா, தபு, ராதிகா ஆப்தே ஆகியோர் நடித்த அந்தாதூன் திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது.. மூன்று தேசிய விருதுகளை அள்ளிய இந்த படம் தற்போது, தமிழில் நடிகர் பிரசாந்த் நடிப்பில் அந்தகன் என்கிற பெயரில் உருவாகிறது. இந்தப்படத்தை பிரசாந்தின் தந்தை தியாகராஜனே இயக்கியுள்ளார். சிம்ரன், பிரியா ஆனந்த், கார்த்திக், சமுத்திரக்கனி, ஊர்வசி, வனிதா விஜயகுமார் என பல நட்சத்திரங்கள் இதில் நடித்துள்ளனர்.
இந்தப்படத்தின் படப்பிடிப்பை முடித்துவிட்ட தியாகராஜன் தற்போது டப்பிங் பணிகளில் தீவிரம் காட்டி வருகிறார். அந்தவகையில் கடந்த சில நாட்களாக பிரியா ஆனந்த், ஊர்வசி ஆகியோர் இந்தப்படத்திற்கான தங்களது டப்பிங் பணிகளை முடித்து கொடுத்தனர். தற்போது சமுத்திரக்கனி டப்பிங் பேசி வருகிறார். தியேட்டர்கள் திறப்பு என்கிற அறிவிப்பு வரும்போது இந்தப்படம் திரையிடுவதற்கு தயாராக இருக்க வேண்டும் என்கிற முனைப்புடன் ஒரு தயாரிப்பாளராக வேகமாக செயல்பட்டு வருகிறார் தியாகராஜன்.