'மதராஸி' படத்தின் முதல் பாடல் எப்போது? | அனுஷ்கா உடன் மோதும் ராஷ்மிகா! | சூர்யாவின் 50வது பிறந்த நாளில் வெளியாகும் 'கருப்பு' படத்தின் டீசர்! | விஜய் சேதுபதியின் 'தலைவன் தலைவி' டிரைலர் வெளியானது! | சிவகார்த்திகேயன் - வெங்கட்பிரபு இணையும் படம் அக்டோபரில் தொடங்குகிறது! | ரஜினி, மோகன்லால் பாணியில் கமலும்... | ஜனாதிபதி மாளிகையில் திரையிடப்பட்ட ‛கண்ணப்பா' | பணி இரண்டாம் பாக டைட்டிலை அறிவித்த ஜோஜூ ஜார்ஜ் | நடிகர் கிங்காங் வீட்டிற்கே சென்று மணமக்களை வாழ்த்திய சிவகார்த்திகேயன் | டெங்கு காய்ச்சல் : மருத்துவமனையில் விஜய் தேவரகொண்டா அனுமதி |
கடைக்குட்டி சிங்கம் படம் மூலம் புகழ் வெளிச்சத்துக்குள் வந்தவர் பிரியா பவானி சங்கர். தற்போது இவர் நடித்துள்ள நான்கு படங்கள் ரிலீசுக்கு தயாராகவும் ஐந்து படங்கள் படப்பிடிப்பிலும் இருக்கும் அளவுக்கு முன்னணி நடிகைகள் வரிசைக்கு உயர்ந்து வருகிறார். அதேபோல சோஷியல் மீடியாவில் எப்போதுமே ஆக்டிவாக இருக்கும் பிரியா, சமீபத்தில் வடிவேலு படத்துடன் காமெடியாக ஒரு பதிவிட்டிருந்தார்.
அதில் “நான் ஒரு கிரியேட் பெர்சன்.. அப்படியா என்ன கிரியேட் பண்ணுவீங்க..? நானே ஏதாச்சும் தேவை இல்லாத பிரச்சனைகளை கிரியேட் பண்ணிக்கொள்வேன்” என ஒரு ஜோக்கை பகிர்ந்துள்ளார். ஆனால் இதற்கு பதிலளித்துள்ள நகைச்சுவை நடிகர் சதீஷ், “அது என்னன்னு எனக்கு தெரியும் பிரியா. கவலைப்படாதே... சீக்கிரம் முடிஞ்சுடும்” என கூறியுள்ளார்”. அப்படி என்ன பிரச்சனையை பிரியா பவானி சங்கர் தானாக இழுத்துக்கொண்டாரோ..?