ஹீரோவாக மாறும் காமெடியன் ரவி மரியா: ஹீரோயின் தேடும் பணி தீவிரம் | ஜனநாயகன் முதல் காட்சி டிக்கெட் விலை எவ்வளவு : இதுதான் கோலிவுட்டில் ஹாட் டாக் | மோகன்லாலின் தாயார் சாந்தகுமாரி காலமானார் | சரஸ்வதி பட படப்பிடிப்பை நிறைவு செய்த வரலட்சுமி | ஊட்டுகுளங்கரா பகவதி கோவிலில் அஜித் வழிபாடு | கண்ணீரை வரவழைத்தது : சிறை படத்தை பாராட்டிய இயக்குனர் ஷங்கர் | வடமாநில இளைஞரை வெட்டிய போதை ஆசாமிகள் : மாரி செல்வராஜ் கடும் கண்டனம் | 2025 முதல் வெற்றி 'மதகஜராஜா': கடைசி வெற்றி 'சிறை' | தொழில் அதிபரிடம் ரூ.10 லட்சம் மோசடி : சொகுசு காருடன் மாயமான 'டிவி' நடிகை | சீரியல் நடிகை நந்தினி தற்கொலை |

அஜித்துக்கு ஒரு சிவா மாதிரி, விஜய்க்கு ஒரு அட்லீ என சொல்லும் அளவுக்கு தொடர்ந்து விஜய்யை வைத்தே அடுத்தடுத்து மூன்று படங்களை இயக்கினார் அட்லீ. கதை பிரச்சனை, பட்ஜெட் முரண்பாடு என பல சர்ச்சைகள் அவரை சுழன்றடித்த நிலையில், தற்காலிகமாக கோலிவுட்டுக்கு குட்பை சொல்லிவிட்டு பாலிவுட்டில் அடியெடுத்து வைத்துள்ளார் அட்லீ. புடிச்சாலும் புளியங்கொம்பு என்பது போல முதல் படமே ஷாருக்கானை வைத்து இயக்கவுள்ளார்.
பாலிவுட்டுக்கு சென்றுவிட்டதால் அந்த பீல்டுக்கு ஏற்றமாதிரி கெட்டப்பையும் மாற்றிக் கொள்ள வேண்டும் என அட்லீ நினைத்திருப்பார் போலும்.. இல்லை யாராவது கூட அவருக்கு சொல்லியிருக்கலாம். அந்தவகையில் புதிய கெட்டப், ஹேர்ஸ்டைலுடன் அட்லீயின் புகைப்படங்கள் சோஷியல் மீடியாவில் தற்போது வலம் வருகின்றன. தனது இந்த உரு(வ)மாற்றத்திற்கு காரணகர்த்தாவான பாலிவுட்டின் பிரபல ஹேர்ஸ்டைலிஸ்ட் ஆலிம் ஹக்கீம் என்பவருக்கு தனது நன்றியை தெரிவித்தள்ளார் அட்லீ..
முன்பு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் கூட பாலிவுட்டுக்கு இசையமைக்க ஆரம்பித்த சமயத்தில் தனது ஹேர்ஸ்டைலை மாற்றிக்கொண்டார் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.