ஜூலை 11ல் அனுஷ்காவின் 'காதி' ரிலீஸ் | இளையராஜாவை வாழ்த்தாத சினிமா பிரபலங்கள் | பந்தா இல்லாத நாகர்ஜூனா | விக்ரம் சுகுமாரனின் மறைவுக்கு அதிக வேலைப்பளு காரணமா? : நடிகை விஜி சந்திரசேகர் வேதனை | நூறு ஸ்ரேயா கோஷல்களை தூக்கி சாப்பிட்டு விடுவார் : பாடகி 'தீ' குறித்து சின்மயி புகழாரம் | பஹத் பாசில் ஸ்மார்ட் போன் பயன்படுத்துவதில்லை: நடிகர் வெளியிட்ட ஆச்சரிய தகவல் | மீண்டும் தலைவராக விரும்பும் மோகன்லால்... : ஆனால் ஒரு நிபந்தனையுடன்? | ஐந்து வருடமாக ரிலேஷன்ஷிப்பில் இருக்கிறேன் : விஜய் பட நாயகி ஓபன் டாக் | தக்லைப் படத்தின் 'விண்வெளி நாயகா' பாடலின் லிரிக்கல் வீடியோ வெளியானது! | நான் சந்தோஷத்தை வெளியில் தேடியது கிடையாது! - 'குபேரா' பட விழாவில் தனுஷ் பேச்சு |
ஜுனியர் என்டிஆர், ராம் சரண், ஆலியா பட், ஒலிவியா மோரிஸ், அஜய் தேவகன் மற்றும் பலர் நடிக்கும் 'ஆர்ஆர்ஆர்' படத்தின் படப்பிடிப்பு உக்ரைன் நாட்டில் நிறைவடைந்துள்ளது. இத்துடன் படப்பிடிப்பு முழுமையாக முடிந்துவிட்டது. 'பேட்ச் ஒர்க்' எனப்படும் ஒரு சில விடுபட்ட காட்சிகளின் படப்பிடிப்பு மட்டும் ஐதராபாத்தில் நடைபெற உள்ளது.
இந்த மாதத் துவக்கத்தில் ஜுனியர் என்டிஆர், ராம் சரண், இயக்குனர் ராஜமௌலி உள்ளிட்ட படக்குழுவினர் ஐதராபாத்திலிருந்து உக்ரைன் நாட்டிற்கு புறப்பட்டு சென்றனர். அங்கு 15 நாட்களுக்கும் மேலாக படப்பிடிப்பு நடைபெற்றது. ஒரு சில காட்சிகள், பாடல் காட்சி ஆகியவை அங்கு படமாக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. படக்குழுவினர் ஐதராபாத் திரும்பியதும் பத்திரிகையாளர்களை சந்திக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
படத்தின் வெளியீடு அக்டோபர் 13 என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், புதிய வெளியீட்டைத் தேதியை பத்திரிகையாளர் சந்திப்பின் போது அறிவிக்கலாம் என்கிறார்கள்.