ஆகஸ்ட் 22-ல் ஓடிடியில் வெளியாகும் தலைவன் தலைவி | லிவ்-இன் உறவுகள் பெண்களுக்கு தீங்கு விளைவிக்கும் : கங்கனா | அப்படி நடித்ததால் ரசிகர்கள் வெறுத்தனர் : அனுபமா பரமேஸ்வரன் | சினிமாவில் 50... வாழ்த்திய பிரதமர் மோடி : நன்றி தெரிவித்த ரஜினி | கூலி படத்தில் மிரட்டிய சவுபின் ஷாகிர், ரச்சிதா ராம் : இவங்க பின்னணி தெரியுமா? | சில கோடி செலவில் ‛கேப்டன் பிரபாகரன்' ரீ ரிலீஸ் : கில்லி மாதிரி வெற்றியை கொடுக்கமா? | கூலி ஆயிரம் கோடி வசூலிக்குமா? | வெளியானது டியர் ஸ்டூடண்ட்ஸ் டீஸர் : ஆக்ஷனில் நயன்தாரா | 8 பெண் உறுப்பினர்கள் : பெண்கள் மயமான புதிய நடிகர் சங்கம் | நான் நாத்திகன் அல்ல; பகுத்தறிவாளன் : கமல் பேச்சு |
2018ம் ஆண்டு பாலிவுட்டில் வெளியாகி வெற்றி பெற்ற படம் பதாய் ஹோ. அமித் ரவீந்திரநாத் ஷர்மா இயக்கத்தில் ஆயுஷ்மான் குரானா, நீனா குப்தா, கஜ்ராஜ் ராவ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்தப் படத்தின் தென்னிந்திய மொழிகளின் ரீமேக் உரிமையை போனி கபூர் பெற்றுள்ளார். முதல்கட்டமாக இது தமிழில் ரீமேக் செய்யப்படுகிறது.
மூக்குத்தி அம்மன் படத்தை இயக்கிய ஆர்.ஜே.பாலாஜி - என்.ஜே.சரவணன் இதனை இயக்குகிறார்கள். நாயகனாக ஆர்.ஜே.பாலாஜி, நாயகியாக அபர்ணா பாலமுரளி நடிக்கவுள்ளனர். மேலும் சத்யராஜ், ஊர்வசி உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள்.
இந்தப் படத்துக்கு வீட்ல விசேஷங்க என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. இது பாக்யராஜ் இயக்கிய படத்தின் டைட்டில் என்பதால் முறைப்படி பாக்யராஜிடம் அனுமதி கேட்டனர். அவரும் அனுமதி வழங்கி இருக்கிறார். வருகிற 21ம் தேதி முதல் படப்பிடிப்பு தொடங்கவுள்ளது. ஒரே கட்டமாக படத்தை முடிக்க திட்டமிட்டிருக்கிறார்கள்.