தெலுங்கிலும் இன்று வெளியான பிரணவ் மோகன்லால் ஹாரர் படம் | சைபர் கிரைமில் சின்மயி புகார் | பிரித்விராஜின் விலாயத் புத்தா ரிலீஸ் தேதி அறிவிப்பு | விஜய் நடிக்க மறுத்து, பின்னர் அவரை வருத்தப்பட வைத்த 'ஆட்டோகிராப்' | மீண்டும் காற்று வாங்கும் சிங்கிள் தியேட்டர்கள் : நிலைமை மாறுமா ? | காப்பி போஸ்டர் சர்ச்சையில் சிக்கிய 'ஜனநாயகன்' | ஒரு பக்கம் மராத்தி பாடல், மறுபக்கம் ஆங்கிலப் படம்… இசையால் பேசவைக்கும் இளையராஜா | சினேகா திருமணத்தை நடத்தி வைத்தேன் : இயக்குனர் சேரன் | மல்டிபிளக்ஸ் தியேட்டர்களின் உணவு பொருட்கள் விலை : உச்சநீதிமன்றம் ஆதங்கம் | புதிய அப்டேட் கொடுத்த ராஜமவுலி |

தமிழ்த் திரையுலகத்தில் உள்ள சங்கங்களில் முக்கியமான ஒரு சங்கம் தென்னிந்திய திரைப்பட பத்திரிகை தொடர்பாளர் யூனியன். ஒரு திரைப்படத்தை மக்களிடம் கொண்டு செல்லக் காரணமாக இருப்பவர்கள் தான் இந்த திரைப்பட பத்திரிகை தொடர்பாளர்கள். அந்த சங்கத்திற்கு இரண்டு வருடங்களுக்கு ஒரு முறை தேர்தல் நடத்தி, நிர்வாகிகள் தேர்வு செய்யப்படுவார்கள். 2021 - 2023ம் ஆண்டிற்கான நிர்வாகிகளைத் தேர்ந்தெடுக்கும் தேர்தல் நாளை ஆகஸ்ட் 19ம் தேதி சென்னையில் நடைபெற உள்ளது.
இந்தத் தேர்தலில் இரண்டு அணிகள் நேருக்கு நேராகப் போட்டியிடுகின்றன. வெற்றி அணி சார்பில் தலைவர் பதவிக்கு டைமண்ட் பாபு, துணைத் தலைவர்கள் பதவிக்கு ராஜ்குமார், வி.கே.சுந்தர், செயலாளர் பதவிக்கு யுவராஜ், இணைச் செயலாளர்கள் பதவிக்கு கணேஷ்குமார், முத்துராமலிங்கம், பொருளாளர் பதவிக்கு ஆனந்த் ஆகியோரும், நலன் காக்கும் அணி சார்பில் தலைவர் பதவிக்கு ஜான், துணைத் தலைவர்கள் பதவிக்கு கோவிந்தராஜ், மதுரை செல்வம், செயலாளர் பதவிக்கு விஜய முரளி, இணைச் செயலாளர்கள் பதவிக்கு ராமானுஜம், செல்வரகு, பொருளாளர் பதவிக்கு குமரேசன் ஆகியோரும் போட்டியிடுகிறார்கள்.
9 செயற்குழு உறுப்பினர்களும் நாளைய தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட உள்ளார்கள். மொத்தம் 69 உறுப்பினர்கள் வாக்களிக்க உள்ளார்கள். காலை ஆரம்பமாகும் வாக்குப் பதிவு மதியம் முடிவடைகிறது. அதன்பின் உடனடியாக வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.