'மாரீசன்' படம் ஜூலை 25ல் வெளியாகிறது | ராஜமவுலி படம் மூலம் இந்திய திரையுலகிற்கு திரும்புவது உற்சாகம் : பிரியங்கா சோப்ரா | 7500 தியேட்டர்களில் வெளியாகும் வார் 2 | கால வரையறையின்றி ஒத்திவைக்கப்பட்ட அனுஷ்காவின் ‛காட்டி' | ஹீரோவாகும் ‛டூரிஸ்ட் பேமிலி' இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் | வேள்பாரி நாவலில் ரஜினிகாந்த்? | பாராட்டுக்கள் கிடைத்தும் வசூலை அள்ளாத 'கண்ணப்பா' | 50வது நாளைக் கடந்த 'மாமன்', நன்றி தெரிவித்த சூரி | ஹரிஹர வீரமல்லு : யு டியூபில் மட்டும் 60 மில்லியன் பார்வைகள் | 'சப்தம்' படத்தை ஓடிடியில் வெளியிட நீதிமன்றம் தடை |
நடிகர் ரஜினிகாந்த்தை வைத்து கபாலி, காலா என அடுத்தடுத்து இரண்டு படங்களை இயக்கி ஆச்சரியப்படுத்தியவர் இயக்குனர் பா.ரஞ்சித். சினிமாவுக்கு வந்த குறுகிய காலத்திலேயே ரஜினி படத்தை இயக்கி விட்டதால் அடுத்ததாக அஜித், விஜய் ஆகியோரின் படங்களை இயக்குவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவரோ ஆர்யாவை வைத்து சார்பட்டா பரம்பரை என்கிற படத்தை இயக்கி, அந்தப் படத்தை எல்லோரும் பேசும்படியான வெற்றி படமாக்கினார். இதையடுத்து மீண்டும் ரஜினி படத்தை பா.ரஞ்சித் இயக்குவதற்கான வாய்ப்புகள் இருக்கிறது என்றும் பேசப்பட்டு வந்தது.
இந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு அண்ணாத்த படத்திற்காக டப்பிங் பேச சென்னையில் உள்ள பிரபல ஒலிப்பதிவுக் கூடம் ஒன்றிற்கு வந்திருந்தார் ரஜினிகாந்த். அந்த சமயத்தில் பா.ரஞ்சித் அவரை சந்தித்த புகைப்படம் ஒன்று சோசியல் மீடியாவில் வெளியானது. இதையடுத்து மீண்டும் ரஜினி படத்தை பா.ரஞ்சித் இயக்குவதற்கான அறிகுறியோ என்று ரசிகர்கள் பேசத்தொடங்கி உள்ளனர்.
ஆனால் தற்போது இது குறித்த இன்னொரு தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது ரஜினிகாந்த் டப்பிங் பேசிய ஒளிப்பதிவு கூடத்தின் கீழ்தளத்தில் தான் விஐபிகளுக்காக பிரத்தியோகமாக படங்களை திரையிட்டு காட்டும் ப்ரிவியூ தியேட்டர் அமைந்துள்ளது. அங்கே சில விஐபிகளுக்காக தனது சார்பட்டா பரம்பரை படத்தை திரையிட்டு காட்ட ஏற்பாடு செய்திருந்த ரஞ்சித். அதுதொடர்பாக அங்கே வந்திருந்தார், அப்போது ரஜினிகாந்த் அங்கே அண்ணாத்த படத்திற்காக டப்பிங் பேசுகிறார் என்பதை அறிந்து மரியாதை நிமித்தமாக அவரை சந்தித்து பேசியுள்ளார். மேலும் தனது சார்பட்டா பரம்பரை படத்தை ரஜினிக்கு போட்டுக் காட்டுவதற்காக நேரம் ஒதுக்கும் படியும் அவர் கேட்டுக் கொண்டதாக சொல்லப்படுகிறது.