அண்ணாமலைக்கு பிடித்த ‛இட்லி கடை' | 'மகுடம்' படத்தை இயக்கும் விஷால்: வைரலாகும் புகைப்படங்கள் | 'மகாபாரதம்' தொடரில் கர்ணனாக நடித்த நடிகர் பங்கஜ் தீர் காலமானார் | மாதவனுடன் மோதும் நிமிஷா | கெனிஷாவின் இசை ஆல்பத்திற்காக பாடலாசிரியர் ஆனார் ரவி மோகன் | பிளாஷ்பேக் : பரப்பன அக்ரஹார சிறையில் தமிழ் படம் | பிளாஷ்பேக் : 'ராஷோமோன்' பாதிப்பில் உருவான 'அந்த நாள்' | கார் ரேஸில் தொடர்ந்து பயணிக்க அஜித் முடிவு | காமெடி நடிகை ஆர்த்தி தந்தை காலமானார் | நீ தனியாக ஜெயித்து காட்டு: மகனை தனித்துவிட்ட விக்ரம் |
தமிழ் திரையுலகில் நட்சத்திர ஜோடியாக இருப்பவர்கள் பிரசன்னா - சினேகா ஜோடி. இந்த தம்பதிக்கு 6 வயதில் விஹான் என்ற மகனும், ஆதந்த்யா என்ற மகளும் உள்ளனர். நேற்று விஹான் பிறந்தநாளை கொண்டாடிய புகைப்படங்களை பிரசன்னா, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
அதோடு, ‛‛ஒரு நாள் நீ என்னை ஒரு பெருமைமிக்க அப்பாவாக மாற்றுவாய் என்று தெரியும். பயமின்றி உயர செல் என் வீரனே. எப்போதும் உன் நண்பனாக இருப்பேன். அளவிடமுடியாத அளவுக்கு உன்னை நேசிக்கிறேன்'' என வாழ்த்தி உள்ளார். கூடவே தன் மகனை என் அவஞ்சர், ஸ்பைடி, என் இட்லி'' என செல்லமாக பதிவிட்டுள்ளார் பிரசன்னா.
நடிகை சினேகா இன்ஸ்டாவில், ‛‛என் அன்பு, என் மகிழ்ச்சி என் பலம், என் மகனுக்கு 6 வயதாகிறது. எந்த எதிர்பார்ப்பு இல்லாமல் நேசிக்க கற்று கொடுத்தாய், பொறுமையாக இருக்க கற்றுக் கொடுத்தாய், நான் உன்னை மிகவும் நேசிக்கிறேன் கண்ணா'' என வாழ்த்தி உள்ளார்.