தயாரிப்பாளர் தக்காளி சீனிவாசன் காலமானார் | போர் சூழலுக்கு மத்தியில் சென்னை திரும்பினார் நடிகர் அஜித்குமார் | பிரியா பவானி சங்கரை தொடர்ந்து ரவிதேஜா படத்தில் இணைந்த தமன்னா! | இன்வெஸ்டிகேஷன் திரில்லர் படத்தில் நடிக்கும் குமரன் | சூப்பர் நேச்சுரல் கிரைம் திரில்லராக உருவாகும் 'மண்டவெட்டி' | தனுசுக்கு ஜோடியாகும் நடிக்கும் ருக்மணி வசந்த்! | 'ஆர்யா 40' படத்தில் இரு நாயகிகள் | 'டென்ஷன்' படத்தில் காமெடி கலந்த வில்லனாக ஆர்.கே.வரதராஜ் | 'ஜெயிலர் 2' படத்தில் ஷாருக்கான் கதாபாத்திரம் என்ன தெரியுமா? | அனிமேஷன் படத்தை இயக்குகிறாரா அனில் ரவிபுடி? |

கடந்த சில மாதங்களுக்கு முன் மலையாளத்தில் நாயாட்டு என்கிற படம் ஒடிடி தளத்தில் வெளியானது. குஞ்சாக்கோ போபன், ஜோஜு ஜார்ஜ் மற்றும் கதாநாயகியாக நிமிஷா சஜயன் ஆகியோர் நடித்திருந்த இந்தப்படம் ரசிகர்களிடம் மிகுந்த வரவேற்பை பெற்றது. போலீஸ்காரர்களிலேயே ஒரு சிலர் தெரியாமல் ஒரு சிக்கலில் சிக்கிக் கொண்டால், அதுவரை நண்பர்களாக இருந்த சக போலீஸ் அதிகாரிகளே அரசு எந்திரத்தின் உத்தரவுப்படி அவர்களை எப்படி வேட்டையாடுகின்றனர் என்பதை மையப்படுத்தி இந்தப்படம் உருவாகி இருந்தது.
இந்தநிலையில் இந்தப் படத்தின் இந்தி ரீமேக் ரைட்ஸை ஜான் ஆபிரஹாமும், தமிழ் ரீமேக் ரைட்ஸை இயக்குனர் கவுதம் மேனனும் தெலுங்கு ரீமேக் ரைட்ஸை அல்லு அர்ஜுனின் தந்தை அல்லு அரவிந்த்தும் வாங்கியுள்ளனர். தெலுங்கில் சூட்டோடு சூடாக நடிகர்கள் தேர்வும் நடைபெற்று வருகிறது. இதில் பெண் போலீஸாக அஞ்சலி நடிக்கிறார். சக போலீஸ்காரர்களாக ராவ் ரமேஷ் மற்றும் சத்யதேவ் இருவரும் நடிக்க இருக்கிறார்களாம்.