வெங்கடேஷ் படத்தில் இணையும் கதாநாயகிகள் யார் | ரஜினி படத்துடன் மோதுகிறது சூர்யா 47 படம் | சர்வம் டெலுலு எப்படி சர்வம் மாயா ஆனது : இயக்குனர் பகிர்ந்த சுவாரஸ்யம் | இரவில் ரஜினி உடன் பைக் ரைட் : ராதிகா சொன்ன பிளாஷ்பேக்... | 100 ஆண்டுக்கு அப்புறம் தான் ரிலீஸ்; ஆனா இப்பவே படம் 'ரெடி': ஹாலிவுட்டில் புது கூத்து! | ‛ஜெயிலர் 2' சஸ்பென்ஸை உடைத்த சிவராஜ் குமார் | சாதனை விலைக்கு விற்கப்பட்டதா 'டாக்சிக்' வெளிநாட்டு உரிமை ? | மீனவர் பிரச்னையை தனித்துவமாக பேசும் 'வலை': இரட்டை வேடங்களில் நடிக்கிறார் அதர்வா | வையாபுரிக்கு ஜோடியான ‛பிக்பாஸ்' தாமரை | இளையராஜா இசையமைக்கும் ‛சைலப்பன் சைக்களிள் மார்ட்' |

ஐகீகய் மோஷன் பிக்சர்ஸ் என்ற பட நிறுவனம் சார்பில் அன்ஸாரி நெக்ஸ்டெல் மற்றும் ரவிகிரண் தயாரிக்கும் படம் ஷீரோ, இயக்குநர் ஸ்ரீஜித் விஜயன் இயக்கத்தில் தயாராகியிருக்கும் இந்த படத்தில் கதையின் நாயகியாக சன்னி லியோன் நடித்திருக்கிறார். மனோஜ் குமார் காதோ ஒளிப்பதிவு செய்யும் இந்த படத்திற்கு, ஜிப்ரான் இசையமைக்கிறார்.
தற்போது இதன் படப்பிடிப்புகள் நிறைவடைந்து படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டுள்ளது. படத்தில் நடித்திருப்பது பற்றி சன்னி லியோன் கூறியிருப்பதாவது: இந்தப் படத்தின் மூலமாக பல மொழிகளையும், நடிப்பின் வேறு பரிமாணங்களையும் கற்றுக்கொள்ள முடிந்தது. தென்னிந்திய மொழிகளில் நடிக்கும் ஆர்வம் ஏற்பட்டிருக்கிறது. எந்த மொழி பட வாய்ப்பு கிடைத்தாலும் அந்த மொழியை கற்றுக் கொள்ள ஆர்வமாக இருக்கிறேன். மலையாளம் ஓரளவுக்கு பேசவும், பேசுவதை புரிந்து கொள்ளவும் முடிகிறது. இவ்வாறு கூறினார்.
இந்த படம் மலையாளத்தில் தயாராகி இருந்தாலும் தமிழிலும் வெளியாகிறது. ஏற்கெனவே வடகறி படத்தில் சன்னி லியோன் ஆடியிருந்தார். அதன் பிறகு அவர் நடித்த சரித்திர படமான வீரமாதேவி நின்று விட்டது. தற்போது இந்த படத்தின் மூலம் மீண்டும் தமிழுக்கு வருகிறார். இதுதவிர நேரடி தமிழ் படம் ஒன்றிலும் நடிக்க இருக்கிறார். அதனால் இப்போதே தமிழ் பேச கற்று வருகிறார்.




