அக்., 5ல் ‛லியோ' டிரைலர் வெளியீடு | வாழை படத்தை எதிர்பார்க்கும் திவ்யா துரைசாமி | 'லியோ' வெளியீட்டிற்குப் பிறகு 'விஜய் 68' பூஜை புகைப்படங்கள் | சர்வதேச திரைப்பட விழாக்களில் ஸ்ருதிஹாசனின் ‛தி ஐ' ஹாலிவுட் படம் | ரஜினி 170வது படத்தில் இணைந்த ரித்திகா சிங் | ‛சித்தா' மிகச்சிறந்த சினிமா : கோவையில் சித்தார்த் நம்பிக்கை | விஜய் 68ல் உள்ள முதல் பாடலின் சிறப்பு அம்சம் | ஒன் டூ ஒன் முதல் பார்வை வெளியீடு | ரஜினி படத்தில் இணைந்தார் துஷாரா விஜயன் | அக்டோபர் 6ல் வெளியாகும் அயலான் பட டீசர் |
கன்னட சூப்பர்ஸ்டார் சிவராஜ்குமார், தமிழ் இயக்குநர் விஜய் மில்டன் இயக்கத்தில் பைராகி படத்தில் தற்போது நடித்து வருகிறார். பிரமாண்ட பட்ஜெட்டில் உருவாகி வரும் இந்த படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு மிக தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இப்படத்தில் நடிப்பது குறித்து சிவராஜ்குமார் கூறியதாவது: நான் தமிழ் சினிமாவின் தீவிர ரசிகன். தொடர்ந்து தமிழ் திரையுலகை கவனித்து வருகிறேன். அங்கு வெளியாகும் அனைத்து படங்களையுமே, உடனடியாக பார்த்து விடுவேன். கமல் சாரின் தீவிர ரசிகன். அவரின் படங்களை முதல் நாளில் பார்த்து விடுவேன். தற்போது நடிகர் தனுஷ் மிகச் சிறப்பான படங்களை செய்து வருகிறார்.
தமிழ் தொழில்நுட்ப கலைஞர்களுடன் பணிபுரிவது எனக்கு எப்போதும் மிகவும் பிடித்த விசயம். இயக்குநர் விஜய் மில்டனை பல காலமாக எனக்கு தெரியும். இப்படத்தின் கதையை அவர் கூறிய போது, படத்தில் அளவான எமோஷனில் அட்டகாசமான ஆக்சன் கலந்த ஒரு அற்புதமான கதை இருந்தது தெரிந்தது. எல்லா தரப்பு மக்களுக்கும் பிடிக்கும் கமர்ஷியல் படமாக இது இருக்கும்.
விஜய் மில்டன் கேமராமேனாக இருந்து கஷ்டப்பட்டு உயர்ந்த நிலைக்கு வந்துள்ளதால், சினிமா குறித்த தேர்ந்த அறிவு அவரிடம் கொட்டிக்கிடக்கிறது. எதையும் எளிமையாக செய்துவிடும் திறமை அவரிடம் இருக்கிறது. மக்கள் 35 வருடமாக என்னை கொண்டாடி வருகிறார்கள்.அவர்களின் அன்புக்கு உண்மையாக உழைக்க வேண்டுமென நினைக்கிறேன். அவர்கள் ரசிக்கும்படி படங்கள் தர கடினமாக உழைப்பேன். இந்தப்படமும் அவர்கள் கொண்டாடும் படைப்பாக இருக்கும். இவ்வாறு கூறினார்.