பிளாஷ்பேக் : ஓவிய நாயகன் ஒளியின் நாயகனான பின்னணி | திரிசூலம், சூர்யவம்சம், விக்ரம் - ஞாயிறு திரைப்படங்கள் | ஏ.ஆர்.ரஹ்மான் வழக்கறிஞர் எச்சரிக்கை | ஹரிஷ் கல்யாணுக்கு ஜோடியாகும் ‛ஸ்டார்' பட நடிகை | நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் படப்பிடிப்பு நிறைவு பெற்றது | துப்பாக்கிய பிடிங்க : விஜய்யின் பெருந்தன்மை - சிவகார்த்திகேயன் நெகிழ்ச்சி | விஷ்ணு விஷால் படத்தில் நிகழ்ந்த மாற்றம் | புஷ்பா 2 டிரைலர் - தெலுங்கை விட ஹிந்திக்கு அதிக வரவேற்பு | அட்லியின் அடுத்த படம் : வெளியானது புதிய அப்டேட் | அஜித்தின் குட் பேட் அக்லி படப்பிடிப்பு விரைவில் முடிவடைகிறது |
சொகுசு கார் இறக்குமதிக்கு நுழைவு வரியிலிருந்து விலக்கு கேட்டு நடிகர் தனுஷ் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தார். அந்த வழக்கு இன்று நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த போது நீதிபதி சுப்பிரமணியன் வழக்கிற்கான தீர்ப்பை வழங்கினார்.
நடிகர் என்று வழக்கில் குறிப்பிடவில்லை, சாமானிய மனிதர்கள் வரி கட்டும் போது நிங்கள் ஏன் வரி கட்ட மறுக்கிறீர்கள் என நீதிபதி கேள்வி எழுப்பினார். அது குறித்த செய்திகளில் மீடியாக்களில் வெளிவந்ததும் டுவிட்டரில் தனுஷிற்கு எதிராக 'வரிகட்டுங்க தனுஷ்' என்ற ஹேஷ்டேக் டிரெண்டிங்கில் வந்தது. சிம்பு ரசிகர்கள்தான் அந்த ஹேஷ்டேக்கில் அதிகம் பதிவிட்டு வருகிறார்கள்.
பொதுவாக டுவிட்டர் தளத்தில் விஜய், அஜித் ரசிகர்கள்தான் அதிகம் மோதிக் கொள்வார்கள். இது போன்று சொகுசு கார் இறக்குமதி வரி விவகாரத்தில் விஜய்க்கு கடந்த மாதம் நீதிபதி கண்டனம் தெரிவித்த அன்று கூட 'வரி கட்டுங்க விஜய்' என்பது டிரெண்டானது. அது போலவே இன்று 'வரி கட்டுங்க தனுஷ்' என்பதை டிரெண்டிங் செய்துள்ளார்கள்.
சிம்பு நடிக்கும் அடுத்த படத்திற்கு சிக்கல் நீடித்துக் கொண்டிருக்கும் நிலையில், இன்று தனுஷின் 44வது படம் பற்றிய அறிவிப்பு வந்ததும் தனுஷ் மீதான சிம்பு ரசிகர்களின் கோபத்திற்கு காரணமாக அமைந்துவிட்டது.