காதலருடன் ஹூமா குரேஷிக்கு நிச்சயதார்த்தம் நடந்ததா? | ரோபோ சங்கர் நினைவாக குபேரர் கோவிலுக்கு ரோபோ யானையை பரிசளித்த நடிகர் டிங்கு! | தீபாவளிக்கு 'கருப்பு' படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வெளியாகிறது! | ஹாட்ரிக் அடிக்கிறாரா பிரதீப் ரங்கநாதன் | ராஜமவுலி தயாரிப்பில் பஹத் பாசில் புதிய பட படப்பிடிப்பு துவங்கியது! | இசைத்துறையில் சாதிக்க என்ன செய்ய வேண்டும்? அழகாக சொல்கிறார் அனுராதா ஸ்ரீராம் | 'காந்தாரா சாப்டர் 1' ஹிட்: ஆன்மிக பயணம் செல்லும் ரிஷப் ஷெட்டி | ரஜினி பிறந்தநாளில் பிரமாண்டமாக ரீ ரிலீஸ் ஆகும் அண்ணாமலை! | இயக்குனர் கென் கருணாஸ் உடன் இணைந்த ஜி.வி. பிரகாஷ்! | 'பள்ளிச்சட்டம்பி' படப்பிடிப்பை நிறைவு செய்த கயாடு லோஹர் |
நடிகை யாஷிகா ஆனந்த் சாலை விபத்தில் சிக்கி தற்போது சிகிச்சை பெற்று வருகிறார். இந்த விபத்தில் அவரது தோழி இறந்து விட்டார். யாஷிகாவுக்கு பல இடங்களில் எலும்பு முறிவு ஏற்பட்டிருப்பதாகவும், அவர் முழுமையாக குணமடைய குறைந்தது 3 மாதங்கள் வரை ஆகலாம் என்கிறார்கள்.
இந்த விபத்தால் யாஷிகா ஆனந்த் நடித்து வந்த படங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியானது. அதில் முக்கியமான படம் யாஷிகா ஆனந்த் ஹீரோயினாக நடிக்கும் கடமையை செய். இதில் அவர் எஸ்.ஜே.சூர்யா ஜோடியாக நடிக்கிறார். மற்றும் மொட்டை ராஜேந்திரன், சார்லஸ் வினோத், வின்சென்ட் அசோகன், ராஜசிம்மன், மோகன் வைத்யா உள்பட நடித்துள்ளனர்.
இயக்குனர் சுந்தர்.சி நடித்த முத்தின கத்திரிக்காய் படத்தை இயக்ககிய வேங்கட் ராகவன் இயக்கியுள்ளார். வினோத் ரத்னசாமி ஒளிப்பதிவு செய்துள்ளார். தடம் படத்திற்கு இசையமைத்த அருண்ராஜ் இசையமைத்துள்ளார், கணேஷ் எண்டர்டெயின்மெண்ட் சார்பில் ரமேஷ், நாகர் பிலிம்ஸ் சார்பில் ஜாகிர் உசேன் ஆகிய இருவரும் இணைந்து தயாரித்துள்ளனர்.
படம் பற்றி இயக்குனர் வேங்கட் ராகவன் கூறியதாவது: படத்தில் எஸ்ஜே.சூர்யாவிற்கு டபுள் டைம் ஸ்டிராங் கேரக்டர். அவர் இப்படித்தான் இருப்பார் என்ற மனநிலையில் இருப்பீர்கள். ஆனால் இந்த படத்தில் அவர் அப்படி இருக்க மாட்டார், முற்றிலும் மாறுபட்ட கதாபாத்திரம் அவருக்கு. யாஷிகா ஆனந்த் வாகன விபத்தில் சிக்கி அவருடன் சென்ற தோழி மரணம் அடைந்த நிலையில் படுகாயத்துடன் உயிர் தப்பினார் என்ற செய்தி எங்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. யாஷிகா ஆனந்த் தொழில் ஈடுபாடும், திறமையும் மிக்கவர் இந்த படத்தில் சிறப்பாக நடித்துள்ளார்.
அவரது பகுதி முழுவதையும் அவர் நடித்துக் கொடுத்து விட்டார். அதனால் எந்த பாதிப்பும் இல்லை. படம் வெளிவரும்போது அவர் மகிழ்ச்சியாக தியேட்டரில் அமர்ந்து படம் பார்ப்பார் என்ற நம்பிக்கை இருக்கிறது. அவருக்காக நாங்கள் பிரார்த்தனை செய்கிறோம். என்றார்.