பிளாஷ்பேக்: சிவாஜிக்கு ஆசியாவிலேயே மிகப்பெரிய கட்அவுட் | பேரன், பேத்திக்கு ஆன்மிக பெயர் சூட்டி மகிழ்ந்த சிரஞ்சீவி | 'பொன்னியின் செல்வன்' பாடல் வழக்கு: ஏ.ஆர்.ரஹ்மான் 2 கோடி செலுத்த கோர்ட் உத்தரவு | செக் மோசடி வழக்கில் தயாரிப்பாளர் சதீஷ்குமார் விடுதலை | 'நான் ருத்ரன்' படத்தில் நடிக்க மறுப்பு : 20 கோடி நஷ்டஈடு கேட்டு தனுசுக்கு நோட்டீஸ் | ஜெயிலர் 2 படத்தை ஜூன் மாதத்திலேயே வெளியிட திட்டம் | அமீர்கான் மகனுக்கு ஜோடியான தமன்னா | ரூ. 40க்கு தனது சாப்பாடு தரும் அர்ஜித் சிங் | தயாரிப்பு நிறுவனம் துவங்கும் ரியோ ராஜ் | பிரீயட், பேண்டஸி படமாக 'தனுஷ் 56' : மாரி செல்வராஜ் தகவல் |

பிக்பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியில் பிரச்சனை செய்த நடிகை வனிதா, நடுவர்களை பற்றி தகாத வார்த்தைகளில் பேசியதாக நகுல் தற்போது குற்றம்சாட்டியுள்ளார்.
விஜய் டிவியின் பிக் பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியில் ஏற்பட்ட பிரச்சனையால் வனிதா விஜயகுமார் சமீபத்தில் வெளியேறினார். அதற்காக நடுவர்களை குற்றம் சாட்டி வீடியோ ஒன்றையும் வெளியிட்டு இருந்தார். இந்நிலையில் நடுவர்களில் ஒருவரான நகுல் அளித்திருக்கும் பேட்டியில் வனிதாவை தகாத வார்த்தைகளை பேசியதாக குற்றம்சாட்டி உள்ளார்.
அதில் அவர், "இன்னும் நன்றாக ஆடி இருக்கலாம் என்று தான் நாங்கள் சொன்னோம். ஆனால் வனிதா தான் வேறு விதமாக பேசினார். நான்கு நிமிட பாடலில் அவர் இரண்டு நிமிடம் சும்மா அமர்ந்துகொண்டு இருந்தார், அதனால் அவர் ஆட தொடங்கும் போது அதிகம் எனர்ஜியுடன் அம்மன் போல ஆடுவார் என எதிர்பார்த்தோம். போட்டியில் ஒப்பிடாமல் எப்படி சொல்ல முடியும்.
நான் வீட்டுக்கு போன பிறகு வனிதா அசிங்கமாக பேசினார் என டீமில் இருப்பவர்கள் சொன்னார்கள். என்னை விடுங்கள், ரம்யா கிருஷ்ணனுக்கு எவ்ளோ பெயர் இருக்கிறது. அவரிடம் வனிதா மன்னிப்பு கேட்டே ஆகணும்". என நகுல் கூறியுள்ளார்.