
விக்ராந்த் ரோணாவில் ஜாக்குலின் கதாபாத்திரம் அறிமுகம்
அவரது கதாபாத்திர அறிமுகமும், போஸ்டரும் இன்று வெளியிடப்பட்டன. கதாநாயகன் சுதீப்புடன் இருக்கும் போஸ்டர் ஒன்றும் ஜாக்குலின் தனியாக இருக்கும் போஸ்டர் ஒன்றையும் இன்று படக்குழுவினர் வெளியிட்டார்கள். கடங் ராக்கம்மா என்பது தான் ஜாக்குலினின் கதாபாத்திரப் பெயர்.
கன்னடம், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி, தமிழ் ஆகிய மொழிகளில் இப்படம் ஆகஸ்ட் 19ம் தேதியன்று வெளியாக உள்ளது. தென்னிந்தியத் திரையுலகில் அடுத்தடுத்து ஐந்து மொழிகளில் வெளியாகும் சில பான்-இந்தியா திரைப்படங்கள் வெளிவர உள்ளன. அவற்றில் இந்த "விக்ராந்த் ரோணா" படமும் ஒன்று.
"நான் ஈ" படத்திற்குப் பிறகு சுதீப் நாயகான நடித்த சில கன்னடப் படங்கள் தமிழிலும் டப்பிங் ஆகி வெளிவந்தன, ஆனால், அவற்றிற்கு வரவேற்பு கிடைக்கவில்லை. இந்தப் படம் ஒரு பேண்டஸி படம் என்பதால் ரசிகர்களை ரசிக்க வைக்கும் என்று எதிர்பார்ப்பு உள்ளது.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!